இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தினர்.
இலங்கைப் பிரச்சனையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது இதில் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர்.
ரஜினி ரசிகர்கள் ஏற்கெனவே 2009-ம் ஆண்டு ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது தனி ஈழம் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் ஈழப் பிரச்சனைக்கான போராட்டத்தில் தங்களின் உணர்வுகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர் என ரசிகர் மன்ற தலைவர் கூறினார்.
இப்போது மீண்டும் ஈழப் பிரச்சனைக்கான போராட்டத்தில் தங்களின் உணர்வுகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர் என ரசிகர் மன்ற தலைவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten