
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் யாஸ்மின் சூக்கா அவர்கள் சமீபத்தில் லண்டனுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். தென்னாபிரிக்காவில் உள்ள பல அமைப்புகளின் அங்கத்தவரும், ஐ.நா அதி உயர் அதிகாரிகளில் ஒருவருமான யாஸ்மின் சூக்கா அவர்கள் அதிர்வு இணையத்துக்கு ஒரு நேர்காணலை வழங்கியுள்ளார். இலங்கையில் போர் குற்றம் நடைபெற்றுள்ளதா என்று ஆராய, பான் கீ மூனால் மூவர் அடங்கிய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக் குழுவின் முக்கிய உறுப்பினரான யாஸ்மின் சோக்காவிடம் , இலங்கையில் போர்குற்றம் நடைபெற்றுள்ளது என்பதனையும், அதற்கான விசாரணை நடைபெறவேண்டும் என்று சொல்வதையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? என்று அதிர்வின் நிருபர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த திருமதி யாஸ்மின் சூக்கா அவர்கள், தான் இதுவரை பார்த்த ஆவணங்கள் அடிப்படையின் அங்கே போர்குற்றங்கள் நடந்துள்ளதை தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு மேல் ஒரு படி சென்று, அவர் இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, அதனூடாக இவ்விடையம் விசாரிக்கப்படவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நாவின் அதிகாரி ஒருவர், இவ்வாறு கடுமையான கூற்றைவெளியிட்டுள்ளது தொடர்பாக, இலங்கை அரசு கடும் அதிருப்த்தியடைந்துள்ளது.
BBC, அல்ஜசீரா, சி.என்.என் போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு மட்டுமே நேர்காணல்களை வழங்கிவரும் யாஸ்மின் சூக்கா போன்ற அதிகாரிகள், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கிவரும் அதிர்வு இணையத்துக்கு நேர்காணல் வழங்கியமை, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச ஆங்கில ஊடகங்களுக்கு இணையாக அதிர்வு இணையமும் தன்னை தரமுயர்த்தியுள்ளதும், இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.
http://athirvu.co.uk/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4627
Geen opmerkingen:
Een reactie posten