தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 maart 2013

மஹிந்த சமரசிங்கவின் கூற்றுக்கள் பொய்யானவை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு !


இலங்கையின் வடக்கில் இராணுவ பிரசன்னம்,மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கள் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க,ஐக்கிய நாடுகள் சபையில் கூறிய விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வை தமிழர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மஹிந்த சமரசிங்கவின் கருத்துக்கள் அதனை எதிர்ப்பார்க்கமுடியாத தோற்றத்தை கொடுத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேசத்தை ஏமாற்றி வருகிறது.
இதனை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் முன்கொண்டு செல்லமுடியாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த சமரசிங்க கூறிய கருத்துக்கள்,தகவல்கள் அனைத்தும் பிழையானவை. எனவே இது தொடர்பில் ஜெனீவாவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, சர்வதேச நாடுகளுக்கு உரிய விளக்கங்களை வழங்கும் என்று செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ள்ளார்.
வடக்கில் இடம்பெயர்ந்தோர் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
எனினும் இன்னும் யாழ்ப்பாணத்தில் 14 இடம்பெயர்ந்தோர் முகாம் இயங்கிவருவதாக செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYms1.html#sthash.DXH5hfzH.dpuf

Geen opmerkingen:

Een reactie posten