இந்தியா, இலங்கைக்கு எதிராக செயற்படவேண்டும். காங்கிரஸ் உறுப்பினர்கள் ராகுலிடம் கோரிக்கை
நேற்று இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸின் உதவித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது இலங்கை தமிழர் பிரச்சினையானது தமிழகத்தில் தமது கட்சியை பொறுத்தவரையில் முக்கியமான அம்சம் என்பதை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த நாடாளுமன்றக் குழுவில் அமைச்சர்களான பி சிதம்பரம், ஜி. கே வாசன், ஜெயந்தி நடராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, இலங்கைக்கு எதிராக செயற்படவேண்டும் என்ற அழுத்தம் தமிழகக் கட்சிகள் மத்தியில் இருந்து பிரயோகிக்கப்படுவதை அடுத்தே காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten