தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 maart 2013

பொலிஸாரால் தாக்கப்பட்ட தமிழ் கைதியை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உத்தரவு !


இலங்கையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தமிழ் அரசியல் கைதி ஒருவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும், இவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட மூவர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
எஸ். அருள்சாமி என்னும் இந்த கைதி, தான் விசாரணை எதுவும் இன்றி மூன்று வருடங்களுக்கும் அதிகமாக கொழும்பு மகசின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் தனது மனுவில் கூறியுள்ளார்.
அருள்சாமி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், சிறைச்சாலையில் அவருக்கு போதுமான மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்றும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவரது சட்டத்தரணி வாதாடினார்.
இந்த விவாதத்தை கேட்ட நீதிமன்றம் அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTVNYmq4.html#sthash.r2wIIzW7.dpuf

Geen opmerkingen:

Een reactie posten