இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடியை அடுத்த தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள், மீன்பிடிப்பதற்காக கடந்த 27ஆம் தேதி கடலுக்கு சென்றனர். 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகில் அவர்கள் சென்று இருந்தனர்.
நேற்று அதிகாலையில் தருவைகுளத்தில் இருந்து சுமார் 52 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்று அங்கு வந்தது.
சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் வந்து விட்டதாக கூறி, 3 விசைப் படகுகளையும், நாட்டுப் படகையும் இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் விசைப்படகில் இருந்த மாணிக்கம், அப்பாஸ், மற்றொரு அப்பாஸ், நிஜாம், ரபீக், ராஜன், ரூபன், செல்வராஜ், தொம்மை அந்தோனிராஜ், முருகன், ஆல்பர்ட், சகாயமணி, குமார், கென்னடி, ராபின், மேன்லி ஆகிய 16 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள 16 பேரையும் உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை என்றும் மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDTYNYlt3.html
Geen opmerkingen:
Een reactie posten