தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 maart 2013

சென்னையில் திரைப்பட இயக்குனர்கள் உண்ணாவிரதம் தொடங்கியது: இலங்கைக்கு எதிராக போராட்டம் !

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திரைப்பட இயக்குனர்கள் இன்று காலை 9:00 மணியளவில் உண்ணாவிரதம் தொடங்கியது. இதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டு இருந்ததுடன், “சாமியானா” பந்தலும் போடப்பட்டு இருந்தது.
இயக்குனர் அமீர், கவுதம் மேனன், லிங்குசாமி, ஜனநாதன், நடிகர்கள் பாண்டியராஜன், எஸ்.ஜே. சூர்யா, மனோபாலா, பொன்வண்ணன், நடிகைகள் சுஹாசினி, குயிலி, சத்யபிரியா, திரைப்பட தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் சிவா, “பெப்சி” விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தில் பேசிய இயக்குனர்கள்,
இலங்கை அரசு மீது பொருளாதார தடைவிதிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
போர்க்குற்றவாளி ராஜபக்சவை சுதந்திரமான பன்னாட்டு நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
ஈழத் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
தமிழ் பகுதியில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தை உடனே வெளியேற்ற இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்.
இனப்படுகொலை செய்த இலங்கையுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்
ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
உண்ணாவிரதத்தில் உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடன இயக்குனர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள், லைட் மேன்கள் உள்ளிட்ட “பெப்சி” தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
சின்னத்திரை நடிகர் - நடிகைகளும் பங்கேற்றார்கள். உண்ணாவிரதத்தையொட்டி படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டன.

Geen opmerkingen:

Een reactie posten