தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

நவநீதம்பிள்ளை அதிகாரத்தை மீறி செயற்படுகிறார்!- இலங்கை மீண்டும் குற்றச்சாட்டு


ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை தமக்குரிய அதிகாரத்தை மீறி செயற்படுகிறார் என இலங்கை மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும், அவர் தொடர்ந்தும் வர மறுப்பது குறித்தும் இலங்கை விசனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை மனிதவுரிமை விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இன்று உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தனது அதிகார வரம்பை மீறி இலங்கை தொடர்பில் அறிக்கை தயாரித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை தயாரித்துள்ள அறிக்கையில் இடைக்கிடையே ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் உள்ள விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதனை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளவற்றை நீக்குமாறு நாம் நவநீதம்பிள்ளையிடம் கோரினோம்.
அதற்கு காரணம் ஐ.நா நிபுணர் குழு என்பது பான் கீ மூனுக்கு தனிப்பட்ட ரீதியில் ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவாகும்.
அது ஐநா அமைப்பினாலோ சர்வதேச நாடுகளினாலோ அங்கீகரிக்கப்பட்ட ஒன்றல்ல. அதற்கு சட்டபூர்வ அதிகாரங்களும் கிடையாது.
இலங்கைக்கு வருமாறு நவநீதம்பிள்ளைக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் வரவில்லை.
எனினும் தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கு அவர் செல்கிறார். இது விசனத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten