நாம் சொல்லும் விடயங்களை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்ற நிலைப்பாடு முக்கியமானது.
ஜெனீவா பிரதிநிதிகளை கொழும்பில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கட்டுப்படுத்த முயற்சிப்பது பொருத்தமாகாது. குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு செயற்படுவது நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும்.
உலக நாடுகளை இலகுவில் சமாளிக்க முடியும் என அரசாங்கம் கருதுவது நியாயமற்றது. அனைத்து நாடுகளும் தங்களைப் போன்ற கொள்கைகளை கொண்டிருக்காது என்பதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எனது அவா.
எனினும் நடைமுறைச் சாத்தியமாக சிந்தித்தால் சில வேளைகளில் இந்தத் தீர்மானம் இலங்கைக்கு பாதகமாக அமையக் கூடுமென தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten