தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 maart 2013

இலங்கையின் போர்க்குற்றங்களை விவரிக்கும் ஆவணப்படம் !


இறுதிப் போரின் பொழுது இலங்கை இராணுவம் பல்வேறுப்பட்ட போர் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டுள்ளது. 26 வருடங்கள் உள்நாட்டில் தொடர்ந்த போரின் போது நிகழ்ந்த குற்றச்செயல்கள் அனைத்தும் கொழும்பின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் கடந்த வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது.
கடந்த சனிக்கிழமை ஊடகங்களிற்கு கருத்துவெளியிட்ட ஜனாதிபதி ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போர்குற்றச் செயல்களினை வண்மையாக நிராகரித்ததுடன் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகள் தலைவரின் 12 வயது மகனை கொல்லவில்லையெனவும் தெரிவித்தார்.
இந்திய ஹிந்து பத்திரிகையிற்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி “ இவ்வாறான ஓர் நிகழ்வு நடந்தமை தொடர்பில் நான் அறியேன். மேலிடத்திலிருந்த (இராணுவ) யாரோ ஒருவரின் கட்டளையிற்கமையவே இது நிகழ்ந்துள்ளது. இதன் பொறுப்பினை நான் ஏற்கின்றேனாயினும் இதுபோன்றதோர் நிகழ்வு நிகழ வாய்ப்பேயில்லை.” என்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் வெற்றியீட்டிய இராணுவத்தினரிடமிருந்து பெற்றுக்கொண்ட புகைப்படங்களை தொழில்நுட்ப உதவியுடன் “நோ பயர் சோன் மற்றும் இலங்கையின் போர்க்குற்றங்கள்” ஆகிய திடுக்கிடச் செய்யும் காணொலிகளில் இறுதியான 138 நாட்கள் எனும் தலைப்பில் மெய்சிலிர்க்க வைக்கின்ற புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக தலைமையகத்தில் “நோ பயர் சோன்” ஆவணப்படத்தினை காட்சிபடுத்துவதற்கு முன்னதாக கருத்து வெளியிட்ட இத்திரைப்பட இயக்குனர் கெலம் மெக்ரே அவர்கள், இப்படத்தில் மனித உயிர்களிற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்த குற்றச் செயல்களிற்கான ஆதாரங்களை காணலாம். உண்மைகள் வெளிவருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நாவிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இவ்வாவணப்படம் மனித உரிமைகள் ஆணையக கூட்டத் தொடரில் திரையிடப்படுவதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான விவாதங்கள் தன்னுடைய நாட்டிற்கெதிராக “ ஒரு கேலிக்குரிய திட்டமிடப்பட்ட ஒரு முகப்படுத்தப்பட்ட முறையிலான பிரச்சாரங்களை கொண்டு செல்வதாகவும்” சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை என்பன சர்வதேச போர்க்குற்ற விசாரணையினை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இலங்கையிலுள்ள இராணுவ ஆட்சியின் காரணமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டில் அமுல்படுத்த இயலவில்லையெனவும் சுட்டிக்காட்டினர்.
2009 ம் ஆண்டு தை மாதம் அரசாங்கம் யுத்த சூனிய வலயங்களை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய உயிரை பாதுகாக்கும் பொருட்டு இப்பகுதியினுள் தஞ்சம் புகுந்தார்களாயினும் இப்பகுதியின் மீதே பலத்த குண்டு மழை பொழியப்படுகின்றமையினை இத்திரைப்படம் விவரிக்கின்றது.
பெண்கள், குழந்தைகளின் சடலங்கள் சிதறிக் காணப்படுகின்றன.
இரண்டு வாரங்கள் இப்பாதுகாப்பு வலயத்தினுள் சிக்கியிருந்த ஐ.நா. பணியாளர் பீட்டர் மெக்கே அவர்கள் ஏன் இலங்கை அரசாங்கம் யுத்த சூனிய வலயத்தினை ஸ்தாபித்தது? என கேட்கும் வினாவும் அங்கு தானே சரமாரியான ஆட்டிலறி தாக்குதல்கள் நடாத்தப்பட்டன என தெரிவிக்கும் பதில்களும் இப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வலயங்கள் அமைக்காது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் நாம் அதனைப்பற்றி கதைக்க மாட்டோம் ஆயினும் இது திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தாக்குதல் என அவர் தெரிவித்தார்.
இவருடன் இணைந்து மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், வைத்தியச்சாலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன செஞ்சிலுவை அதிகாரிகள் மூலமாக இப்பகுதிகளில் தாக்குதல்கள் நடாத்த வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்தபோhதிலும் அவர்கள் அதனை கணக்கில் கொள்ளவில்லை.
இக்காணொளிகளில் பெற்றோர் இறந்த மற்றும் உயிரிற்கு போராடுகின்ற தங்களின் போராளி, சாதாரண பிள்ளைகளின் உடலங்களுடன் கதறும் காணொளி உடலை உலுக்குகின்றது.
ஆரம்பத்தில் அதிகாரிகள் தமிழ் போராளிகளின் சடலங்களை விசாரிக்கின்றனர். அதன் பின்னர் அழுக்கடைந்த, நிர்வாணமான பிணங்களை புதைக்கின்றனர். அதிலும் பெண்களின் சடலங்கள் அனைத்தும் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதென்பது அங்கிருந்த இராணுவ சிப்பாய்களின் உரையாடல் தெளிவாக புரிய வைக்கின்றது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்தரின் நெஞ்சுப் பகுதியில் 5 குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அவருடைய சடலம் காட்சியளிக்கின்றது. இவர் நேரடியாக சுடப்படவில்லை மாறாக இராணுவ கட்டுப்பாட்டில் 2 மணித்தியாலங்கள் இருந்துள்ளார். இவர் உண்பதற்காக பிஸ்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இக்காணொலி தொடர்பில் சந்தேகம் கொள்வதாக இலங்கைத்தூதுவர் ஆரியசிங்க அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா வில் அறிவித்தார்.
எதுஎவ்வாறாயினும் தாம் அனைத்து காணொளிகளையும் திறம்பட ஆராய்ந்த பின்னரே வெளியிட்டதாக கெலம் மெக்ரே அவர்கள உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் குழுக்கள் இறுதிப் போரின் பொழுது 40, 000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.
ஐ.நாவிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இவ்வாவணப்படம் மனித உரிமைகள் ஆணையக கூட்டத் தொடரில் 

Geen opmerkingen:

Een reactie posten