தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 maart 2013

நாமலின் அழுத்தத்தில் இந்திய அழகிகள் கைது !


நுவரெலியாவின் Sun Hill என்ற உணவு விடுதியின் உரிமையாளரான வசந்த என்பவரால் 'Lush' எனப்படும் கரயோக்கி நிலையமொன்று நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய 12 அழகிகள் கடந்த 18ஆம் திகதி இரவு கொள்ளுபிடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இந்திய அழகிகள் மூன்று பேரும், நேபாளத்தின் அழகிகள் ஒன்பது பேரும் இருந்துள்ளனர். அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் நண்பர்கள் சிலர் இந்த கரயோக்கி நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்த பெண்கள் சிலரை வெளியில் கூட்டிச் செல்வதாக கூறியுள்ளனர். "இவர்கள் விபசாரிகள் அல்ல" எனக் கூறி, இந்நிலையத்தின் உயரதிகாரிகள் மறுத்துள்ளனர். எங்களுக்கு அது தெரியாது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தான் இவர்களைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார் எனக் கூறி, அங்கிருந்த அழகிகள் சிலரை பலவந்தமாக கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.

எனினும் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் அவர்கள் தடுக்கப்பட்டதையடுத்து "பார் உனக்கு என்ன நடக்கப் போகிறது என்று" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மறுநாள் இந்திய அழகிகள் காணாமல் போயுள்ளனர். இது குறித்து கொள்ளுப்பிட்டி பொலீசில் கரோகி நிலைய நிர்வாகத்தினரால் புகாரும் செய்யப்பட்டுள்ளது. எனினும் காணாமல் போயிருந்த இந்திய அழகிகள் கொள்ளுப்பிட்டி பொலீசில் சரணடைந்ததுடன், கரயோக்கி நிலையத்தில் அயல்நாட்டு அழகிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும், தங்களுக்கான கொடுப்பனவுகள் சரியாக வழங்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

இதன் அடிப்படையில் 19ஆம் திகதி இரவு விசேட பொலிஸ் குழுவொன்று இது குறித்து தேடிப் பார்க்க கரயோக்கி நிலையத்தை சுற்றி வளைத்துள்ளனர். அவ்வேளையில் அங்கிருந்த அனைத்து அழகிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 20ஆம் திகதி மாலைவரை அவர்கள் விடுதலை செய்யப்படவுமில்லை. இந்த கரயோக்கி நிலையத்தின் உரிமையாளரான நுவரெலியா வசந்தவுக்கு சொந்தமான "பியர் த்ரீ" கரயோக்கி நிலையமானது கடந்த வருடம் பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனைக்கேற்ப சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்த அழகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகரவினால் கரயோக்கி நிலையம் மற்றும் இரவு விடுதியின் உரிமையாளராக உருவாக்கப்பட்டவரே நுவரெலிய வசந்த என்பவராவார்.

அமைச்சராக இருந்த சமயம் மகிந்த விஜேசேகர சட்டவிரோதமாக சேர்த்த பெருந் தொகைப் பணத்தை இவ்வாறு முதலீடு செய்திருந்தார். இதன் மற்றுமொரு பங்குதாரர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆவார். கடந்த ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு எதிராக உட்கட்சிப் பூசலை ஏற்படுத்த திலங்க முனைந்தபோது அவரை பயமுறுத்த பாதுகாப்புச் செயலாளரினால் "பியர் த்ரீ" க்கு பொலிசாரை அனுப்பி சுற்றி வளைக்கச் செய்தார். அன்றைய தினமே நாம் இச்செய்தியின் வெளியிட்டிருந்தோம். தற்போது நகரத்திலுள்ள அனைத்து கரயோக்கி நிலையங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் ஆளுகைக்கு உட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4735

Geen opmerkingen:

Een reactie posten