அமெரிக்க - இலங்கை உறவுகளுக்கு போரின்போது இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் பெரும் சிக்கலாக மாறியுள்ளது என்று சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் பணிகளை முடித்து திரும்பிய அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெட்னீஸ் முன்னர் குறிப்பிட்டதாக ஒரு விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் வரை அமெரிக்க - இலங்கை உறவுகள் ஒன்றும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கவில்லை. மிகவும் நன்றாகவே தான் இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த போது அதற்காக மகிழ்ச்சி தெரிவித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
ஆனால் அதற்குப் பின்னர் தான் காட்சிகள் மாற ஆரம்பித்தன. இந்த நான்கு ஆண்டுகளில் கீரியும் பாம்பும் போலவே இந்த நாடுகள் மாறிவிட்டன.
அமெரிக்கா பல சமயங்களில் அதிகாரபூர்வமாக கருத்து வெளியிடும் போது அடக்கி வாசித்துக் கொண்டாலும் இலங்கையின் அரசியல் தலைமைகள் ஒன்றும் அப்படி நாவை அடக்கிக் கொள்வதில்லை.
அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அமெரிக்காவை அதன் நடவடிக்கைகளை தாராளமாகவே விமர்சிக்கின்றன.
போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் தான் கொழும்பில் தூதுவராகப் பணியாற்றிய ரொபேட் ஓ பிளேக் தமது பணியை முடித்து திரும்ப வேணடிய நிலையில் இருந்தார்.
அவர் போர் முடிவுக்கு வந்தவுடன், வெளியிட்ட ஒரு அறிக்கையில் மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு அவசியமானது என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்று வரை இதுவே இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
போர் இறுதிக்கட்டத்தை எட்டியபோதே அதில் மோசமான மீறல்கள் இடம்பெறுவதை அமெரிக்கா அறிந்து கொண்டிருந்தது. ஆனால் அப்போது அதை வெளிப்படையாக எதிர்க்கவில்லை.
போர் முடிவுக்கு வந்தவுடன் தான் பிளேக் அந்தப் பிரச்சினையைக் கிளப்பத் தொடங்கினார். அவர் கொழும்பில் பணியை முடித்தவுடன் வாசிங்டன் திரும்பி இராஜாங்கத் திணைக்களத்தில் வேறு எந்தப் பொறுப்பிலாவது நியமிக்கப்பட்டிருந்தால் சில வேளைகளில் இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாடு இந்தளவுக்கு இறுக்கமானதாக இருந்திருக்காது.
அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் முற்கணிப்பிடும் ஆற்றல் பிளேக்கிடம் உள்ளது என்பதற்கு இரண்டு உதாரணங்கள் உள்ளன.
முதலாவது ஏற்கனவே குறிப்பிட்டது தான். அதாவது போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தான். இலங்கையுடனான நெருக்கத்தை தீர்மானிக்கும் விடயமாக இருக்கப் போகிறது என்ற கணிப்பு.
அது போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அமெரிக்காவின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த விடயம் தெளிவாகவே கூறப்பட்டது.
அது அரசியல் ரீதியான பிளேக்கின் முற்கணிப்பு ஆற்றல்.
இரண்டாவது, 2007ம் ஆண்டின் தொடக்கத்தில் வன்னியின் மேற்குப் புறத்தில் மன்னாரில் இலங்கை இராணுவம் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கிய போது கொழும்பிலிருந்து இராஜாங்கத் திணைக்களத்துக்கு ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.
இலங்கை இராணுவம் சிறியளவில் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளத் தொடங்கியுள்ள இந்தத் தாக்குதல்கள், பாரிய போர் வெடிக்கும் என்றும் புலிகளை அழிவுக்குள் தள்ளும் என்றும் எதி்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறுசிறு குழுக்களாக இராணுவ அணிகள் புலிகள் மீது நடத்தும் தாக்குதல்கள், புலிகளுக்கு நெருக்கடியாக அமையும் என்று மன்னார் களமுனையில் போர் தீவிர கட்டத்தை அடைய முன்னரே பிளேக் எச்சரித்திருந்தார்.
அந்தச் செய்தி அனுப்பப்பட்ட காலம், புலிகள் அழிக்கப்படுவர் என்று எவருமே கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத காலம். போர்முனையில் இலங்கை இராணுவம் தீர்க்கமான வெற்றிகளையும் பெறவில்லை.
புலிகளுக்கு எதிரான போரின் மூலோபாயத்தை சரியாக இராணுவம் வடிவமைத்திருக்கவும் இல்லை.
புலிகளுக்கு எதிரான பிரதானமான போர் என்பது வடக்கில் முகமாலையில் தான் வெடிக்கும் அல்லது ஓமந்தையில் தான் வெடிக்கும் என்று பரவலாக நம்பப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.
அப்போதே பிளேக் மன்னாரில் தொடங்கப்படும் சிறிய சிறிய தாக்குதல்கள் புலிகளை அழிவுக்குள் தள்ளும். பெரும் போராக வெடிக்கும் என்று எதிர்வு கூறும் வகையில் கணிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் கொழும்பில் பணியை முடித்து திரும்பிய பிளேக்கிற்கு மீண்டும் கொழும்பு விவகாரங்களைக் கையாளும் பதவியான தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் பதவி கொடுக்கப்பட்டது.
இது பிளேக்கின் கணிப்புகளுக்கு உட்பட்டதாக, அமெரிக்க கொள்கை வகுக்கப்பட்டதற்கு இன்னும் வசதியாகிப் போனது.
இந்நிலையில் போர் நடந்த போதே பொதுமக்களுக்குப் பாரிய அழிவுகள் ஏற்படுகின்றன என்பதை அமெரிக்கா அறியாதிருந்தது என்று எந்த வகையிலும் கருதமுடியாது.
ஆனாலும் போரை நிறுத்தும் விடயத்தில் அமெரிக்காவினால் அவ்வளவு செல்வாக்கு செலுத்த முடியாதிருந்தது.
அதற்குக் காரணம் இந்தியாவின் முழுமையான ஆசீர்வாதம்.
அதேவேளை போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த வாரம் கொழும்பு வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய அங்கமான யூ.எஸ். எயிட் மூத்த அதிகாரியான டெனிஸ் ரோலின்ஸிடம் போரில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற மதிபீட்டை அமெரிக்கா செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பியதற்கு அப்படி எந்த மதிப்பீடும் செய்யப்படவில்லை என்று பதிலளித்திருந்தார்.
போரில் குற்றங்கள் இடம்பெற்றன என்பதை உறுதிப்படுத்தும் அமெரிக்கா தோராயமாக ஒரு எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று நிச்சயம் கணித்திருக்கும்.
அது இல்லாமல் போர் முடிவுக்கு வந்த கையுடன் அது ஒருபோதும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியிருக்க வாய்ப்புகள் இல்லை.
இறுதிப்போர் இடம்பெற்ற பகுதிகளை ஐநாவின் செய்மதியும் படம் பிடித்தது. அமெரிக்காவின் செய்மதியும் படம் பிடித்தது.
இவற்றின் மூலம் அமெரிக்காவுக்கு நம்பகமான தரவுகள் கிடைத்திருக்கக் கூடும்.
அண்மையில் மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான இராணுவ நீதிமன்றம் போரின் போது பொதுமக்கள் மீது இராணுவம் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தவில்லை என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் ஐநாவினது, அமெரிக்காவினது செய்மதிகள் இராணுவத்தினது ஆட்டிலறி நிலைகளையும் இவை இலக்கு வைத்த இடங்களையும் நிச்சயம் பதிவு செய்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
எனவே பொறுப்புக்கூறலை அமெரிக்கா சர்வதேச சமூகத்தின் கையில் கொடுக்க முடிவு செய்துவிட்டால் அரசாங்கம் திடுக்கிடும் பல ஆதாரங்கள் வெளிவரக் கூடும்.
அது பாலச்சந்திரன் பற்றிய ஒளிப்படங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சியை விட இன்னும் அதிகமான பேரதிர்ச்சிகளைக் கொடுக்கலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சீரான நிலையில் இருந்து இலங்கை - அமெரிக்க உறவுகள் இப்போது நெருக்கடி நிலையை அடைந்திருப்பதற்கு பற்றீசியா புரெட்னீஸ் குறிப்பிட்ட காரணம் சரியானது.
அதாவது பொறுப்புக்கூறல் தான் அமெரிக்க - இலங்கை உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இல்லாவிட்டால் போர் நிறுத்த காலத்தில் இலங்கைப் படைகளை மறுசீரமைத்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட நவீனமயப்படுத்துவதற்கு உதவிய அமெரிக்கா இவ்வாறு எதிர்த்து நிற்க வேண்டியதில்லை.
அதைவிட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2007ம் ஆண்டில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கியதன் விளைவாக 2008ல் விடுதலைப் புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் பற்றிய தகவல்களை அமெரிக்கா வழங்கியது.
அமெரிக்கா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தான் அவற்றை இலங்கைக் கடற்படை தாக்கி அழித்தது.
புலிகளை அழிப்பதிலும், அவர்களுக்கு ஆயுத வளங்கள் கிடைக்காமல் தடுப்பதிலும் அக்கறை காட்டி இலங்கையுடன் நெருக்கமாக நின்ற அமெரிக்கா இப்போது தொலைவில் நிற்கிறது.
இதற்கு பற்றீசியா புரெட்னீஸ் குறிப்பிட்ட போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் மட்டும் தான் காரணமா? அதற்கு அப்பாலும் வேறு காரணங்கள் உள்ளனவா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
சுபத்ரா
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTXNYmx6.html#sthash.Ih1UwC4s.dpufவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த போது அதற்காக மகிழ்ச்சி தெரிவித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

Geen opmerkingen:
Een reactie posten