தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 maart 2013

கண்களை மூடினால் பாலச்சந்திரன் குரல் ஏக்கத்துடன் என் காதுகளில் ஒலிக்கிறது! பேராசிரியர் அறிவரசன்


பாலச்சந்திரன்... வெறிபிடித்த சிங்கள அரசால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட அந்தச் சிறுவனின் படத்தைப் பார்த்தால், கல்நெஞ்சமும் கலங்கும். பாலச்சந்திரனை நன்கு அறிந்தவரும், அவருடன் பழகியவருமான பேராசிரியர் அறிவரசன் வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் கடையத்தில் இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
2007-ம் ஆண்டு கிளிநொச்சியில் உள்ள தமிழ்ப் பயிற்சிக் கல்லூரியில் புலிப் படை வீரர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கச் சென்று எட்டு மாதங்கள் தங்கி இருந்தேன். அந்தத் தருணங்களில்தான் பாலச்சந்திரனைப் பார்த்தேன்.
செஞ்சோலைக் குழந்தைகள் காப்பகத்துக்கு ஒருநாள் நான் சென்றபோது, முதல் வரிசையில் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் கையைப் பிடித்தபடி ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
யாராக இருக்கும் என நான் யோசித்தபோதே, மதிவதனி 'இவன் என் மகன்’ என்று அறிமுகம் செய்தார்.
எனக்கு அந்தச் சிறுவன் வணக்கம் சொன்​னான். அவனை அருகில் அழைத்து, 'உன் பெயர் என்ன? பள்ளியில் படிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். 'என் பெயர் பாலச்சந்திரன். ஆண்டு மூன்று படிக்​கிறேன்’ என்று சிரித்தபடியே சொன்னான்.
என் தம்பி பெயர் பாலச்சந்திரன். அவர் களத்தில் மரணித்து விட்டார். அவர் நினைவாக பையனுக்கு இந்தப் பெயரைச் சூட்டினோம்’ என்றார் மதிவதனி.
அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது, 'அம்மா... வீட்டுக்கு வேண்டாம். அப்பாவைப் பார்க்கப் போக​லாம்’ என்றான் பாலச்சந்திரன்.
உன்னிப்பாகக் கவனித்தேன். 'என்னை விட்டுட்டு நீங்க மட்டும் அப்பாவைப் பார்த்துட்டு வந்துட்டீங்க. நானும் அப்பாவைப் பார்க்கணும். கூட்டிட்டுப் போங்க...’ என்று தன் அம்மாவிடம் அடம்பிடித்தான் பாலச்சந்திரன். அவனைக் கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினார் மதிவதனி.
இரவில் கண்களை மூடினால் பாலச்சந்திரன் குரல் ஏக்கத்துடன் என் காதுகளில் ஒலிக்கிறது. தூக்கத்தைத் தொலைத்து தினமும் அழுகிறேன்.
என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையில்...'' சொல்லி முடிக்கும் போதே, கண்களில் கண்ணீர் வழிகிறது!
ஜூனியர் விகடன்
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYmt7.html#sthash.Yhf6cF93.dpuf

Geen opmerkingen:

Een reactie posten