தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 maart 2013

பிரித்தானிய அமெரிக்க தூதரகம் முன்னால் எரிக்கப்பட்ட அமெரிக்க தீர்மானம்!


பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க தீர்மானத்தை எரித்துள்ளனர்.
பல நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி நடாத்திய இவ் ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவினால் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வைக்கப்பட்ட தீர்மானத்தில் நகல் வடிவத்தை சில எரித்து அமெரிக்க தீர்மானத்திற்கு எதிர்ப்பைக் காட்டினர்.
அண்மை நாட்களாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும் மாணவர்களின் எழுச்சி, தமிழீழ மக்களின் விடிவுக்காக சில கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ந்துகொண்டிருக்கும் உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக நேற்றைய தினம் லண்டனில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.
நூற்றுக்கணக்கான மாணவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டுள்ள இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு ஆதரவளித்து அவர்கள் வைத்துள்ள 9 அம்சக் கோரிக்கைகளையும் ஆதரித்ததோடு, அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தமிழர்களுக்கு ஆதரவை தராது எனவும் சில உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய காலநிலையையும் பொருட்படுத்தாது நடாத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்திலேயே ஒருசிலரால் இவ்வாறு அமெரிக்க தீர்மானத்தின் நகல் எரிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் 20ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten