தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 18 maart 2013

தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டங்கள் தீவிரவாத செயல் என்கிறார் இலங்கை தூதர் காரியவசம்


தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை தீவிரவாத நடவடிக்கை என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவசம் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராகவும் தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களை கடந்த ஒரு வார காலமாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவசம்,
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் தேவையற்றது. இலங்கையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு தேவையில்லை. நாங்களே ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறோம்.
சர்வதேச நிலையிலான ஒரு தீர்மானம் என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் உணர்வுகளை கிளப்பிவிடக் கூடியதாகவே இருக்கும்.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை வெளிநாடு வாழ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தூண்டி விடுகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் தீவிரவாத செயல்களைப் போல இருக்கின்றனர்.
அப்பாவி இலங்கையர்களைத் தாக்குகின்றனர்.
இதைத்தான் இலங்கையில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கடைப்பிடித்தனர்.
வன்முறை மூலம் எந்த தீர்வையும் உருவாக்கி விட முடியாது என்றார் அவர். 

Geen opmerkingen:

Een reactie posten