தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 maart 2013

போர் குற்றவாளி மகிந்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலர் தீக்குளிப்பு!


தற்கொலை முயற்சிகள் வேண்டாம்!- செந்தமிழன் சீமான் உருக்கமான வேண்டுகோள்​!
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 01:14.53 PM GMT ]
நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டதை தமிழ்த் தேசிய இனம் தனது ஆன்மாவில் ஆறாத காயமாய் சுமந்து வருகிறது என்பதற்கு சான்றாக கடலூர் மாவட்டம், கடலூர் தாலுக்கா, நல்லவாடு கிராமத்தினைச் சேர்ந்த தம்பி இல.மணியின் தீக்குளிப்பு சம்பவம் அமைந்துவிட்டது.
சிங்கள பேரின வாத அதிபர் ராஜபக்சவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரக் கோரியும்,கடலூர் சுனாமி குடியிருப்பு கட்டிடப் பணிகளில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க கோரியும் தீக்குளித்த என் அருமைத் தம்பி இல.மணி நாம் தமிழர் கட்சியின் கடலூர் பகுதி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக களமாடியவர் . எமது அமைப்பின் பெருமைமிக்க தளபதியாக விளங்கும் இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது.
நீண்ட நெடிய காலமாக தமிழ்த் தேசிய இனம் தம் வரலாற்றுப் பாதையில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து கொண்டே இருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரின வாதத்தினால் பெருக்கெடுத்து ஓடிய தமிழனின் குருதி இன்றும் உலராத நிலையில் தம்பி.இல.மணியின் தீக்குளிப்பு முயற்சி இந்த இனம் இன்னும் தன்னை அழித்தே தழைக்க முயல்கிறது என்பதை உணர முடிகிறது.
தமிழரின் தாய்நிலமான ஈழத்தில் உயிராக உடலாக உதிர்ந்த இந்த இனம் துளிர்ப்பதற்காக உணர்வோடும், அறிவோடும் களமாடவேண்டிய, என் அன்பிற்கினிய தளபதி தம்பி இல.மணி இப்படி தன்னைத்தானே அழித்துக்கொண்டு இந்த இனத்தை எழுப்ப முயற்சிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன விடுதலை பாதையில் தமிழினம் இழந்த உயிர்கள் ஏராளம் இருக்க, தம்பி.இல.மணி போன்ற என்னுயிர்த் தம்பிகளை இழக்க குடும்பத்தின் மூத்த அண்ணனான என்னால் ஒரு போதும் முடியாது.
சத்தியத்தின் திரு உருவாக விளங்கும் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனின் தம்பிகளான நாம் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கையோடு களமாட வேண்டிய எம் தம்பிகள் இது போன்ற தற்கொலை முயற்சிகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்.
மாவீரர்கள் அப்துல்ரவூப்,முத்துக்குமார்,செங்கொடி போன்ற நம் இனத்தின் பெருமைமிக்க ஆளுமைகளை, வளர்ந்து வாழ்ந்து இந்த இனத்திற்கு உதாரணங்களாய் விளங்க வேண்டியவர்களை, தீயின் செந்நாவிற்கு பலி கொடுத்துவிட்டு, பரிதவித்து நிற்கின்ற இக்காலக்கட்டத்தில் தம்பி.இல.மணியின் தற்கொலை முயற்சி என்னை மட்டும் அல்ல, நாம் தமிழர் என்கின்ற இந்த இனத்தின் பெரும் குடும்பத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேண்டாம் தம்பிகளே! இழந்தது போதும்.களமாட,வெற்றி பெற நமக்கு இலட்சியம் மிக்க இலக்குகள் இருக்கின்றன. நம் இனத்தை அழித்த சிங்கள பேரின வாத அரசினை தமிழ்த் தேசிய இனம் சினம் கொண்டு,வன்மம் சுமந்து உலகச் சமூகத்தின் முன் நிறுத்தி பழிதீர்த்துக் களமாட வேண்டிய இக்காலக்கட்டத்தில் தம்பி.இல.மணியின் தற்கொலை முயற்சி தவிர்க்கபட்டிருக்க வேண்டிய ஒன்றாகவே நான் கருதுகிறேன்.
எம்மை ஆற்றொணாத் துயரிலும், கண்ணீரிலும் ஆழ்த்தி இருக்கிற தம்பி.இல மணியின் தற்கொலை முயற்சி போன்ற தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் செயல்களில் தமிழின இளைய சமூகம் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
உயிரை தர வேண்டாம்..தம்பிகளே..நாம் தமிழர் என்கிற உணர்வினை தாருங்கள்.அது போதும். இந்த இனத்தின் விடுதலைக்கு. என உங்களிடம் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
செந்தமிழன். சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

http://news.lankasri.com/show-RUmryDTYNYlt4.html

போர் குற்றவாளி மகிந்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலர் தீக்குளிப்பு
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 08:43.49 AM GMT ]
இலங்கையில் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு சமூக ஆர்வலரான தீக்குளித்த நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அங்கிருந்தோர் தீயை அணைத்து மிகவும் ஆபத்தான நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன், “இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என தீக்குளித்த நபர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இனப்படுகொலை செய்த ராஜபக்சவை கூண்டிலேற்றக் கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரர் தீக்குளிப்பு
தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவை ஐ.நா. மன்றம் தண்டிக்க கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரரும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளருமான தோழர் இளமணி வயது 44  தீக்குளித்தார்.
இந்திய தேசியக்கொடியை தனது தோளில் முத்திரையாக பச்சை குத்தியிருந்த அவர், இந்திய மத்திய அரசு இலங்கையோடு இணைந்து தமிழ் இனப்படுகொலையை  நட்த்தியது கண்டு மனம் பொறுக்காமல் தன் தோளில்  குத்தியிருந்த தேசியக்கொடியை தீ இட்டு பொசுக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு முன்னாள் இராணுவ வீரரின் மன நிலையே இப்படியென்றால். மொத்த தமிழினத்தின் மனமும் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர்வார்களா?
40 சதவிகித தீப்புண்களோடு உயிருக்கு போராடும் அவர் நலம் பெற்று மீண்டு வந்து எம் தமிழ் சமூகத்துக்கு பணியாற்ற வேன்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.
3ம் இணைப்பு
இதற்கிடையில் சம்பவ இடத்தில் இருந்து மணி வைத்திருந்த மனுவாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தின் முதல் பக்கத்தில் ஈழ தமிழர்கள் வெல்லட்டும், இலங்கை அதிபர் ராஜபக்ச ஒழிக என்று எழுதப்பட்டு இருந்தது.
மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
வெளிநாட்டில் கப்பல் கட்டும் துறையில் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது இந்தியாவின் நாட்டுப்பற்று என்னை கவர்ந்தது. இதனால் எனது வலது கையில் இந்தியன் என்றும், தேசிய கொடியையும் பச்சை குத்தி வைத்துள்ளேன். எனது உடலை தானமாக வழங்கியுள்ளேன். 26 முறை இரத்ததானம் கொடுத்துள்ளேன்.
சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை எதிர்த்து ஜனநாயக முறையில் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன். இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீதி வேண்டி வருகிற 11–ந் தேதி கடலூர் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் இதை சார்ந்த ஊழல் வாதிகள் அதற்கும் இடையூறு செய்து திசை திருப்பி விடுவார்கள். ஆகவே எனது மரணத்திற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மரணத்திற்கு பிறகு தான் சுனாமி வீட்டு ஊழலுக்கு உயிர்பிறக்கும் என்ற நம்பிக்கையில் என் ஜீவனை நான் அழித்துக் கொள்கிறேன்.
மேலும் இலங்கையில் 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும். அதற்காக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டும். மேலும் எனது ஈழ தமிழ் சமுதாயம் தனிநாடு பெற்று, எனது உயிரின் மக்கள் நன்றாக நல்வாழ்வு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனது தாய், மனைவி, மகள், மருமகன், மகன்களுக்கு எத்தனையோ துன்பங்களை கொடுத்து விட்டேன். நீங்கள் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். எனது இறுதி சடங்கை தற்போது உள்ள வீட்டில் வைத்து என்மீது இந்திய தேசிய கொடியை போர்த்தி எடுத்து நல்லவாடு இடுகாட்டில் என்னை எரித்து என்நினைவாக சிறு கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.
முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணி கூறுகையில்,
 ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே போராடி வருகிறார். அவரது வழியில் ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும். சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து அவரை தண்டிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக எனது உயிரை கொடுப்பதில் பெருமை அடைகிறேன் என்றார்.


http://news.lankasri.com/show-RUmryDTYNYltz.html
Indian man attempts self-immolation on urging to take legal action against war criminal Rajapaksa
[ Monday, 04 March 2013, 02:06.16 PM GMT +05:30 ]
With heat on the Sri Lanka issue picking up, a 45-year-old man attempted self-immolation to press the Union government to vote against Sri Lanka United Nations Human RightsCouncil (UNHRC) for war crimes.
Police said S Mani, 45 from Nallavadu, arrived at the Cuddalore collectorate in northern Tamil Naduwith a can of kerosene. He doused himself with kerosene and set himself ablaze while raising slogansagainst the Union government for failing to protect the Sri Lankan Tamils, many of whom were killedin the civil war in the island nation.
Policemen on duty and passersby rescued him and admitted him in the Cuddalore government general hospital.
Mani is battling for life after sustaining severe burn injuries in the suicide bid.
A few members of pro-Tamil outfits and parties supporting LTTE had committed self-immolation in recent years demanding action against the SriLankan government for human rights violation during the fag end of the ethnic war between the government and the LTTE.
However, police claimed that Mani could have resorted to the extreme step because his family failed to get the Tsunami relief and rehabilitationpackage.


Geen opmerkingen:

Een reactie posten