ஒவ்வொரு நாளும், பத்து புது கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தை நடத்துகிறார்கள்.
திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகை இட்டனர்.
மதுரையில் என்றும் காணாதபடிக்கு பத்தாயிரம் மாணவர்கள் வீதியில் பேரணி நடத்தினர் .
மத்திய அரசு அலுவலகங்களை குறி வைத்து மாணவர்கள் நகர்வது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இந்நிலையில் , தமது சொந்த,வியாபார , லாப நட்ட பிரச்சினைகளிற்கு வீதிக்கு வந்து போராடும் திரை துறையினர்., உலகம் முழுவதும் இவர்கள் பங்குகொண்ட ,நடித்த தமிழ் திரைப்படம் பார்த்து அவர்களிற்கு ஆதரவு அளிக்கும் தமிழர்களின் முக்கிய பிரச்சினைக்கு இதுவரை மவுனமே காத்து நிற்கின்றனர்.
அவர்களில் சிலர்., சிம்பு, இமான், இன்று அனிருத் போன்றவர்கள் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உள்ளார்கள்.
தமது படம், விஸ்வரூபம் பிரச்சினைக்கு உள்ளான பொழுது , தமிழர்கள்தான் தமது காசை ஆயிரத்தை, பத்தாயிரத்தை கமலுக்கு அனுப்பி தமது பாசத்தை காண்பித்தார்கள்.
அதே மாதிரி முதன்மை நடிகர் ரஜினியும் தமது படத்தை தமிழில் எடுத்து தமிழ் திரையரங்கதில்தான் வெளியிட்டு வியாபாரம் பார்கிறார்.
இவர்களை எல்லாம் விட , நடிகராக இருந்து தமிழ்மக்களின் ஆதரவு பெற்று எதிர்க்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் இதுவரை கிஞ்சித்தும் இது பற்றி பேசவில்லை .
மற்றொரு நடிகர் மற்றும் கட்சி தலைவரான சரத்குமார் இது ஏதோ நேபாள நாட்டு பிரச்சினை போலவே உள்ளார்.
இங்கே இவ்வளவு போராட்டம் நடைபெறும் பொழுதும, அண்ணா ஹஜாரே வுக்கு டெல்லிக்கு சென்று அளித்த நடிகர் விஜய் , இங்கும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் விழுப்புரம் சென்று இலவச திருமணம் என்று அரசியல் ஆசையில் படம் காட்டி கொண்டு உள்ளார்.
விஜயும் ஸ்பானிஷ் நடிகர் அல்ல தமிழ் மொழியில் வசனம் பேசி தமிழ் மொழியில் படம் எடுக்கும் நடிகர்தான் .
இவர்கள் முதலான அனைவரும் வீதிக்கு வந்து போராடவேண்டாம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று அறிக்கை மட்டுமாவது கொடுக்கட்டும் .
அதுதான் தமிழ் மொழியை வைத்து திரை வியாபாரம் செய்த இவர்கள், உலக தமிழர்களிற்கு காட்டும் நன்றி கடன் என்று சொல்லலாம்.
அதுதான் தமிழ் மொழியை வைத்து திரை வியாபாரம் செய்த இவர்கள், உலக தமிழர்களிற்கு காட்டும் நன்றி கடன் என்று சொல்லலாம்.
அதை செய்துதான் ஆகவேண்டும் .
அப்படி இல்லாமல் போனால் இவர்கள் இனிவரும் காலங்களில் , ஆங்கிலத்திலோ அல்லது ஸ்பானிஸ் மொழியிலோ படங்கள் எடுத்து அந்த நாட்டு தியேட்டர்களில்தான் வியாபாரம் பார்க்க முடியும் என்றே நிலைமை உள்ளது.
ஏன் என்றால் மாணவர்கள் போராட்டம் அப்படி உள்ளது. விமான நிலையத்தையே முற்றுகை இடும் இவர்களுக்கு இவர்களின் படம் ஓடும் தியேட்டர் எம்மாத்திரம் என்பதை அவர்கள் வெகு சீக்கிரம் உணர்ந்து , ஆதரவு அளிப்பார்கள் என்றே அனைவரும் எதிர்பார்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten