தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 augustus 2015

அடக்கி வாசிக்கப்பட்ட செய்தி: இரவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: CCTV கமாராவில் !

மாத்தறை வல்கம பிரதேசத்தில் அமைந்துள்ள , லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி வீட்டின் மீது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. ராணுவத்தினர் பாவிக்கும் அதி நவீன ரக இயந்திரத் துப்பாக்கியை பாவித்தே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். இவை அனைத்தும் அருகில் உள்ள CCTV கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. சுட வந்தவர் இதனை ஒரு எச்சரிக்கையாக செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவென்றால் , குறித்த அதிகாரி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் முன்னர் இருந்த சில பெரும் புள்ளிகள் தொடர்பான ஆவணங்கள் சிலவற்றை சேகரித்தது தான் என்கிறார்கள்.
இதனை ரணில் அரசும் அடக்கி வாசித்துள்ளது. மீடியாக்களில் இச்செய்தி அதிகமாக வெளியாகவில்லை என்பது ஒரு புறம் இருக்க , மகிந்த ராஜபக்ஷவுக்கு இன்னும் இதுபோன்ற பலம் உள்ளது என்பது தான் அதிர்ச்சி தரும் விடையமாக உள்ளது. அது போக ஆட்சி மாறினால் கூட , நான் நினைப்பதை சாதிப்பேன் என்பது போல இவர் செயல்பட்டு வருகிறார் என்பது அதனை மிஞ்சிய அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள் விடையம் அறிந்தவர்கள்.

Geen opmerkingen:

Een reactie posten