தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 augustus 2015

நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எதை எம் சந்ததிக்கு கொடுக்கப் போகின்றோம்: குருகுலராசா



மாவீரர்களின் குருதியின் பயனே இன்றைய எமது பாதுகாப்பு: கலையரசன்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 05:08.16 PM GMT ]
எமது ஆயுதப்போராட்டத்தில் மாவீரர்கள் சிந்திய குருதியும், உடலுமே இன்றைய எமது தமிழ் இன தலை நிமிர்விற்கும், பாதுகாப்பிற்கும் மூல காரணகர்த்தாவாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்தார். 
இன்று கல்முனையில் நடைபெற்ற பிரச்சார நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எங்களில் பலர் ஏதாவது எதிர்பார்ப்புடனும், சுயலாபத்துடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலச்சூழ்நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எம் இனத்தின் விடுதலைக்காக களமாடி விதையான மாவீரர்கள் எம் இனத்தின் வீரபுரிசர்கள்.
எமது அம்பாறை மண்ணின் மாவீரர்களையும் எம்மினத்தின் போராளிகளையும் ஒரு கணம் சிந்தித்துப்பார்க்க வேண்டும் அப்போது அவர்களது தியாக உணர்வு அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்யும்.
எமது மாவீரர்களின் நினைவுக் கல்லறைகளுக்குக் கூட சென்று அவர்களுக்காகவேண்டி ஒரு நிமிடமாவது அக வணக்கம் செய்யமுடியாத நிலையிலேதான் இன்றும் எம்மினம் இருந்து
வருகின்றது. அவ்வாறான சூழல்த் தான் இந்த நாட்டில் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிநித வெளிப்படை உண்மையும் கூட.
இந்த நாட்டில் ஜே.வி.பி கிளர்ச்சியில் இறந்தவர்களுக்குக்கு நினைவு நாளை அனுஸ்டிப்பதற்கு அனுமதி கொடுக்கும் சிங்கள பேரினவாத அரசுகள் ஏன் தமிழர்களுக்கு மாத்திரம் அனுமதி கொடுக்க தவறுகின்றார்கள்?
அவ்வாறு அனுமதி கொடுத்தால் மீண்டும் மாவீரர்கள் உயிர்தெழுந்து விடுவார்கள் என்று அஞ்சுகின்றாதனாலோ அவர்கள் அனுமதி கொடுக்க விரும்பவில்லை என்ற சந்தேகம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒவ்வொருவர் மனதிலும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.
அன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை உருவாக்கிய பெருமை எமது தேசியத்தலைவரையே சாரும். அவரது சிந்தனையின் உருவாக்கவே இன்று தமிழ் மக்கள் மத்தியில் பெரு விருட்சமாக இருந்து எமது தமிழ் மக்களின் உரிமைகள், தேவைகளை பற்றி வெளி உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது அவ்வாறான நல்ல சிந்தனைகளின் இருப்பிடமாகவே அன்று தேசியத் தலைவரின் தளம் அமைந்திருந்தது.
இவ்வாறானவர்களின் உயரிய சிந்தனைகளுக்கு எம்மிடம் இன்று இருக்கும் ஒரே பலம் எமது ஆயுத பலமான வாக்குப்பலமாகும் இந்த வாக்குப்பலத்தினை அனைவரும் எதிர்வரும் 17ஆம் திகதி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கின்றோம்.
ஆகவே அனைத்து தமிழர்களும் தமிழ்த் தேசியம்; வெல்வதற்காக வேண்டி உங்களது வாக்குப்பலத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமான வீட்டிற்கு இட்டு எமது கட்சியை அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெற உழைக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எதை எம் சந்ததிக்கு கொடுக்கப் போகின்றோம்: குருகுலராசா
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 03:29.28 PM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூநகரிப்பிரதேசத்துக்கான பரப்புரை கூட்டம் பூநகரி முழங்காவில் பொது விளையாட்டுத்திடலில் நடைபெற்றது.இதில் வடக்கு மகாண சபை கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
இந்த பூநகரி பிரதேசம் எமது மண்ணின் ஆழமான தொன்மை கொண்ட மண். இங்கிருக்கின்ற பொன்னாவெளி என்ற கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எமது மக்கள் காவு தடியில் பால் சுமந்ததாக வரலாறு சொல்கின்றது.
அதுபோலவே கௌதாரி முனையில் வெள்ளை மலைகளில் ஒரு வராலாற்று தொன்மம் இருக்கின்றது.
ஆனால் இப்படிப்பட எமது தொன்மைகளை அழித்து அதை வியாபாரமாக்கி எமது அடையாளங்களை அழிக்க வேலைகள் செய்கின்றார்கள்.
அரசாங்கத்தோடு இணைந்திருந்தவர்கள். நாம் எமது பாரம்பரியங்களை அழிய விட்டு நாம் எமது சந்ததிக்கு எதை கொடுக்கப்போகின்றோம்.
இவற்றையும் எமது பூர்வீகத்தையும் எமது உரிமைகளையும் காப்பதற்குதான் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குக்கேட்கின்றது.


Geen opmerkingen:

Een reactie posten