தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 augustus 2015

காணாமற்போனோர் குறித்த ஐ.நா குழுவின் இலங்கை பயணம் பிற்போடப்பட்டது!

பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் மஹிந்தவுக்காக 20 கோடி செலவிட்ட விமல்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 09:22.34 AM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலின் முன் வேலை மற்றும் மஹிந்த ராஜபக்சவின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் 98 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதோடு, வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக்கொள்வதற்காக 41,073,937 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அக்கூட்டுத்தாபனத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவொன்று இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
இத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக 98 ஊழியர்களை பயன்படுத்தியமைக்காக 1,980,342 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதோடு நாடு முழுவதும் செயற்படுவதற்காக 84 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனேகமானவைகள் வாடகை அடிப்படையில் பெறப்பட்டு 18,804,900 ரூபாய் அதற்காக செலுத்தப்பட்டுள்ளது.
எரிபொருளுக்காக 13,246,372 ரூபாய், ஊதியங்கள், மேலதிக வேலை மற்றும் வாழ்வாதார உதவிகளுக்காக 9,022,664 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக பாரிய அளவிலான செயற்பாடுகள் மேற்கொண்ட விமல் வீரவன்ச அமைச்சராக செயற்பட்ட போது பொது வசதிகள் அமைச்சின் கீழ் இவ் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 17ம் திகதிக்குப் பின்னர் ஈபிடிபி என்ற நாமம் அழிக்கப்படும். குவேந்தரன்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 11:47.36 AM GMT ]
யுத்தத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது, ஆனந்த சங்கரியும் டக்ளசும் அங்கிருப்பது முழுவதும் புலிகள் என்று சொன்னார்கள்.
டக்ளசும் ஆனந்த சங்கரியும் தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி நின்றார்கள். 25ஆயிரம், 30 ஆயிரம் தமிழர்கள் தான் அங்கு வாழ்வதாக சொன்னார்கள்.
யுத்தத்தில் சாவது முழுவதும் புலிகள் என்று டக்ளஸ் சொன்னான். நாங்கள் மூன்றரை லட்சம் மக்கள் முள்ளுக் கம்பிகளுக்குள் சென்றோம்.
நாங்கள் அனுப்புகின்ற செல்லின் வீதத்தால் தப்பமுடியாது என்று சொன்னவர்கள் இன்று வாக்குப் பிச்சை கேட்கின்றார்கள்.
அரசாங்கத்திற்காக வக்காளத்து வாங்கியவர்கள் இன்று வாக்குப் பிச்சை கேட்கின்றார்கள்.
இம்மாதம் 17ம் திகதிக்குப் பின்னர் ஈபிடிபி என்கிற நாமம் அழிக்கப்படும் என முழங்காவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் த.குவேந்தரன் இவ்வாறு  கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmr1A.html

காணாமற்போனோர் குறித்த ஐ.நா குழுவின் இலங்கை பயணம் பிற்போடப்பட்டது!
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 01:19.03 PM GMT ]
காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணிக்குழு, எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணிக்குழு வரும் ஓகஸ்ட் 3ம் நாள் தொடக்கம் 10 நாட்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது.
எனினும், வரும் 17ம் நாள் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தப் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பின்னரே இந்தக் குழுவின் பயணம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேரதல் பரப்புரைகள் நடந்து கொண்டிருக்கும் போது. ஐ.நா குழு பயணம் மேற்கொள்வது நெருக்கடியானதாக இருக்கும். சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து, பிரச்சினைகளை அணுகுவது கடினமானது.
எனவேதான் தேர்தல் முடியும் வரை ஐ.நா குழுவின் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmr1D.html

Geen opmerkingen:

Een reactie posten