காணாமல் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த கோரி ஐ.நாவிற்கு கடிதம் ஒன்றை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி செபமாலை அடிகளார் நேற்று புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழு, யாழ் மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, வடக்கு,கிழக்கில் உள்ள காணாமல் போனோரின் உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் ஆகியவை இணைந்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையாளருக்கு காணாமல் போனோர் தொடர்பாக நம்பகத்தன்மையற்ற உள்ளக விசாரனையில் நம்பிக்கை இல்லை என தெரிவித்து சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,,
மனித உரிமைகள் ஆணையாளர், ஐ.நா சபை,
பாலேஸ் வில்சன்,
52 றியூடெஸ் பாக்கியூஸ்,
சே -12.01, ஜெனிவா,
சுவிஸ்லாந்து,
2015.08.05
பாலேஸ் வில்சன்,
52 றியூடெஸ் பாக்கியூஸ்,
சே -12.01, ஜெனிவா,
சுவிஸ்லாந்து,
2015.08.05
இலங்கை பிரச்சினை தொடர்பான OHCHR மேற்கொள்ளும் விசாரணை.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலே, கொடூரமாக நடந்தேறிய இறுதிப்போர் தொடர்பாக நீங்கள் சமர்ப்பித்த உண்மையானதும், நம்பகரமானதுமான அறிக்கைக்காக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சிவில் சமூகங்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நாங்கள் உங்களுக்கும், உங்களது அலுவலகத்திற்கும், மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம்.
மேலும் தற்போது நீங்கள் வெளியிட இருக்கின்ற அறிக்கையானது தமிழ் மக்கள் அனுபவித்த கசப்பான நிலைமைகளை வெளிக்கொணரக்கூடிய, முறையான மற்றும் பாரபட்சமற்ற பதிவுகளை உள்ளடக்கியதாக அமையும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
ஒர் உள்ளாட்டுப் பொறிமுறையோ, அல்லது உள்நாட்டின் உயர் நிலை பொறிமுறையோ, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வைத் தரும் என்பதை தங்களுக்கு பொறுப்போடு தெரிவிப்பதற்காகவே இவ்வறிக்கையைச் சமர்ப்பிப்பதுடன், சர்வதேச பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையின் மூலமே ஓரு தீர்வு எட்ட முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இலங்கையின் பொறுப்புடமை தொடர்பாக 31.03.2011ம் ஆண்டு ஐ.நா.வின் நிபுணர்த்துவ குழு, சமர்ப்பித்த அறிக்கையில் “நாட்டு மக்களின் உரிமைகள் மீறப்படும் போது அந்நாட்டு அரசின் பொறுப்புடமையானது, அவ் அரசின் உத்தியோக பூர்வமானதாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் கடமையும் பொறுப்புமாக இருக்கின்றது.
ஒரு நாடு தானே சர்வதேச ரீதியிலான குற்றங்களை அரங்கேற்றும் போது அது அக்குற்றங்களுக்கான நீதி கோரப்படும் சந்தர்ப்பங்களில் அதன் நீதி பெறமுடியாது. நிர்வாக அமைப்பில் அங்கம் பெறமுடியாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி நியமங்களுக்கமைவாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தன் சொந்த வழக்கில் நீதிபதியாகவே இருக்க முடியாது. ஸ்ரீலங்காவின் கீழே குறிப்பிடுகின்ற முரண்பாடு ஓர் இனம் சார்ந்த பாகுபாடாகும்.
ஒரு நாடு அதன் இனம் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றும் போது பாகுபாடற்றதாக செயற்பட வேண்டும். அப்படி இருப்பினும் இலங்கை வரலாற்றுப் பதிவுகளின் படி இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்று வரையும், நீதித்துறையற்ற தன்மையை தோற்றுவிப்பதில் தவறியுள்ளது. தமிழர்களுக்கெதிரான குற்றங்கள் இழைக்கப்படும் போது நீதித்துறை எப்போதும், அரசியல் தலைமைக்கு துணை போவதாக உள்ளது. இது கடந்த கால விசாரணைகளில் சான்றாகியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (Rome statute of international Criminal Card) உறுப்புரை 5ல் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள், ஆக்கிரமிப்புக்கள் என்பவற்றிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இன அழிப்பிற்கான மாநாடு 1948 உறுப்புரை 2ல் இன அழிப்பிற்கான வரையறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்படியான வரையறைகளின்படி இன அழிப்பு இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏனெனில் இலங்கை நாடானது சிங்கள மக்களால் முற்றுமுழுதாக ஆட்சி செய்யப்படுவது யாவரும் அறிந்ததே. இவ்வாறான நிலையில் சிங்கள மக்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான போர்க்குற்றம் தொடர்பாக உள்ளுர் பொறிமுறைகளினாலோ, கூட்டுப் பொறிமுறைகளினாலோ, நீதியினை பெற்றுத்தர முடியாது.
ஆகவே இந்நிலையின் போர்க்குற்றம் தொடர்பாக உண்மை நிலையைக் கண்டறிய அகில உலக விசாரணையானது அடிப்படைத் தேவையான ஒன்றாக கருதப்படுகின்றது.
இலங்கை மக்கள் பல்வேறு மாற்றங்களை இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து கண்டிருக்கிறார்கள். அவற்றில் எந்தவொரு ஆட்சியாளர்களும், தமிழ் மக்களின் பரிதாப நிலையை முன்னுரிமைப்படுத்த முன்வருவதில்லை.
இலங்கையின் எந்தவொரு உள்ளக விசாரணை பொறிமுறைகளும், குறிப்பாக சர்வதேச சுயாதீன குழு, நடத்திய விசாரணைகளும் கூட வெற்றிகரமாக அமையவில்லை. பொறுப்புடமையும், நீதித்தன்மையும், பாதிக்கப்பட்ட மக்களுடைய பார்வைக்கு நம்பகத்தன்மையாக அமைவதோடு மட்டுமல்லாமல் அவர்களது இலவச பங்கேற்பை உறுதிப்படுத்துவதோடு சர்வதேச விதிமுறை, மற்றும் சர்வதேச தரத்திற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும்.
அத்தோடு சிங்கள இராணுவத்தின் தலையீடுகளும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட அவர்களின் அமைவிடங்களும், நாட்டினுடைய எந்தவொரு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கும், தொடர்ந்தும் பயந்த சூழ்நிலைகளை ஏற்படுத்திய வண்ணமாக உள்ளது.
மேற்படி இலங்கையின் கடந்தகால வரலாறும், மற்றும் அரசியலின் அடிப்படையில் உள்ளக மற்றும் கலப்பு விசாரணைப் பொறிமுறைகள் மூலம் தரமான தீர்வினை பெறமுடியாது. மாறாக நல்ல தெரிவு யாதெனில் ஐ.நா.வினால் ஏற்படுத்தப்படுகின்ற சுதந்திரமான சர்வதேச விசாரணையே ஆகும்.
ஒரு அரசிடம் உண்மையான வலு இருக்கும் போது ஒரு கலப்பு விசாரணை முறையானது பிரயோசனமானதாக அமையும். ஆனால் அங்கே நீதியை நிலைநாட்டும் தன்மையானது குறைந்த நிலையிலேயே காணப்படும்.
ஆனால் இது இலங்கைக்குப் பொருத்தமானதல்ல ஏனெனில் சிங்களப் பிரதேசங்களுக்கு எதிராகவோ, அல்லது தமிழ் மக்களின் நீதியை நிலைநாட்டக் கூடிய வாதங்களை முன்வைக்கவோ, அரசியல் சக்தியானது செயற்படவில்லை.
இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர் தென் தொகுதியில் உள்நாட்டு விசாரணை மூலம் இராணுவம் என்கின்ற பெயரையே இல்லாமல் ஆக்கப்படும் என்று சொல்லியும் கூட, உண்மையிலேயே எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தல் களங்கள் இவை பற்றியே வாதங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றன.
இலங்கையின் தற்போதைய அரசும் கூட நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் போர்க்குற்றங்கள், மனித மாண்பிற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இன அழிப்புக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு ஒரு நிரந்தரத்தன்மையில்லாத ஆதரவினையே வழங்குகின்றது.
இப்படியான வழக்கு விசாரணைகள் தொடர்ந்தால், தமிழ் எதிர்ப்பு உணர்வுகள் தீவிரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழர் விரோத படுகொலைகளும், ஏற்படலாம். இப்படியான சந்தர்ப்பங்களில் தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு எதிரான வாழ்க்கை முறையை தோற்றுவிக்கின்றது.
அத்தோடு இலங்கையின் தோல்விகள் தொடர்பாக செயலாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையில் உரிமைகளுக்கு இலங்கை சட்டத்தின்படி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கை அரசாங்கத்தின்மேல் தங்கியில்லாத வகையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோல்வியை கொடுக்காத வகையிலும், விசாரணைப் பொறிமுறைகளை அமைக்கவேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான மற்றும் OISL ன் அறிக்கை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அங்கீகாரம் பெறும் வகையில் ஒரு மில்லியன் கையெழுத்துக்களுடன் கோரப்பட்டிருந்தன. இந்நிகழ்வு கூட இலங்கை பிரச்சினை தொடர்பாக மனித உரிமை பேரவையில் நடவடிக்கையினை எடுக்க முடியாத வகையில் தூண்டுகோளாக அமைந்தது.
இச்செயன்முறையை முறியடிப்பதற்காக உள்நாட்டு மற்றும் கலப்பு பொறிமுறைகள் மூலமாக மாற்றுக் கொள்கைகளை முறியடித்தனர். மேலுமாக உங்களுடைய அர்ப்பணிப்பிற்கு மரியாதை செலுத்தி, உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், பொறுப்புடமையையும், நீதியையும், நிலைநாட்டவும், குற்றங்களை தடுத்து நிறுத்தும் தன்மையை கட்டியெழுப்பவும், மற்றும் அநீதிகள் மீண்டும் நடைபெற விடாதபடி இருப்பதற்காகவும், கீழ்வரும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தும்படி உங்கள் அனுமதியை கோருகின்றோம்.
இலங்கை பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைகளை உள்நாட்டு மற்றும் கலப்பு விசாரணைப் பொறிமுறைகள் மூலம் மேற்கொள்ளாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூலமோ, அல்லது சர்வதேச பொறுப்புடமைகளுக்கான நடைமுறை மூலமோ, மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten