தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 augustus 2015

அனுதாபத்தை பெற மகிந்தவின் சூழ்ச்சி அம்பலம்

மகிந்தவின் பயணங்களுக்கான 114 மில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 02:25.58 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பயணங்களுக்காக தரவேண்டிய பாக்கியை செலுத்துமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஜனாதிபதி செயலகத்திடம் கோரியுள்ளது 
2011ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ச, தமது பயணங்களுக்காக செலுத்த வேண்டிய 114 மில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு எயார்லைன்ஸ் கேட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் அஜித் டயஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயன்கோனுக்;கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன்படி 113 மில்லியன், நானூற்றி தொன்னூற்று நான்காயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு ரூபாய்களை முன்னாள் ஜனாதிபதி செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதவிர இதற்கான வரிகளையும் செலுத்தவேண்டும் என்று எயார்லைன்ஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ச. திருப்பதிக்கு கடந்த டிசம்பத் 9ஆம் 10ஆம் திகதிகளில் சென்று வந்த செலவும் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்

விமலுக்கு எதிராக ஆவணங்கள் தயார்: நிரூபிக்கப்பட்டால் 10 வருடங்கள் சிறை
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 04:25.11 AM GMT ]
போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து, அரசாங்க கடிதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மோசடி, அது தவறு என தெரிந்தும் அக்கடிதத்தை பயனபடுத்தியமை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
குற்ற புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை நிறைவு செய்து விசாரணை அறிக்கைகள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 1979 இலக்கம் 15 குற்றவியல் வழக்கிற்கமைய 454, 455,456,462 என்ற பிரிகளின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் 10 வருடத்திற்கும் அதிக காலம் சிறை தண்டனை வழங்கப்படும்.
குற்றவியல் வழக்கு சட்டத்திற்கமைய இக்குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டால் பிணை வழங்க முடியாது, எனினும் சஷி வீரவன்சவை கைது செய்து பிணை வழங்கியமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். 
எப்படியிருப்பினும், இதுவரையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணை நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக மேற்கொண்டு வழக்கு தொடுப்பதற்காக பல ஆவணங்கள் தயாராகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmryE.html

அனுதாபத்தை பெற மகிந்தவின் சூழ்ச்சி அம்பலம்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 06:48.13 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றில் அவரது தரப்பினராலேயே குண்டு தாக்குதலை நடத்த செய்து, மக்களின் அனுதாபத்தை பெற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் முதல் கட்டமாகவே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு பழிவாங்கும் நோக்கில் மகிந்த ராஜபக்சவின் கூட்டத்தின் மீது ரவி கருணாநாயக்க தரப்பினரால், குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ராஜபக்ச தரப்பினர் கதையை ஜோடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் பெயர் குறிப்பிடவிரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பான இரகசியமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 29 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில் நடந்துள்ளது.
அந்த கலந்துரையாடலில், முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் கலந்து கொண்டனர்.
குண்டு தாக்குதல் திட்டத்துடன் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், தபால், வைத்தியசாலை மற்றும் போக்குவரத்து துறைகளில் பணிப்புறக்கணிப்புகளை ஆரம்பித்து, வழமையான நடவடிக்கைகளை சீர்குலைப்பது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர நாட்டில் இனவாதத்தை தூண்டுவது எனவும், அந்த பணிகளை ராவணா பலய அமைப்பிடம் ஒப்படைப்பது என்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கப்படும் நாளான  எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு பெயர் முகவரிகள் அற்ற இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகளை ஒட்டவும் ராவணா பலய அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்த சுவரொட்டியில் ரணில் விக்ரமசிங்க நாட்டை பிரிக்க போகிறார் என்று மக்கள் பயமுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகளை அச்சிடும் பொறுப்பு, டளஸ் அழகப் பெருமவின் முன்னாள் ஊடக இணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிக்கு இணையாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கிளிநொச்சி பிரதேசங்களில் சிங்கள விரோத இனவாத சுவரொட்டிகள் ஒட்டப்பட வேண்டும் எனவும் அப்போதே தென் பகுதியில் இனவாதத்தை தூண்ட முடியும் எனவும் இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmrzD.html

Geen opmerkingen:

Een reactie posten