தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 augustus 2015

எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம்: ரணில் விக்ரமசிங்க

கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன: முன்னாள் போராளி.
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 01:19.39 PM GMT ]
யாழ்.தேர்தல் களத்தில் 15 கட்சிகள், 6 சுயேற்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக 21 கட்சிகளின் 210 வேட்பாளர்கள், 7 வேட்பாளர்களை வெற்றபெற வைப்பதற்கு களமிறங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.
உண்மையாக போராடியவர்கள், தேசத்தை நேசித்தவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்துகின்ற வேளை,  தமிழ்த் தேசியத்திற்குச் செல்லும் வாக்குகளை இல்லாதொழிக்க தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் லட்சக்கணக்கில் பணங்களைப் பெற்று வந்துள்ளார்கள்.
நாங்கள் முன்னாள் போராளிகள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்கின்றார்கள். உண்மை அதுவல்ல. அவர்கள் முன்னாள் போராளிகளும் அல்ல என முழங்காவிலில் இடம்பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் போராளியொருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு விசாரணையில் சர்வதேச தலையீடு: ஜீ.எல்.பீரிஸ்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 01:49.15 PM GMT ]
போர் தொடர்பான உத்தேச உள்நாட்டு விசாரணையில் சர்வதேச தலையீடு இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச சமூகம் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை, கசிந்துள்ள ஐக்கிய நாடுகளின் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக கசிந்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த செயற்பாடுகளுக்குள் வெளிநாட்டு உதவிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பொறுப்புகளின் தன்மை இன்னும் தெளிவில்லை.
உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐ.நா தலைமை தாங்குவதுடன் நிதியுதவிகளையும் வழங்குகிறது. இதனால், உள்நாட்டு விசாரணை என்பது வெறும் பெயர் மாத்திரமே.
அத்துடன் இலங்கை அரசாங்கமும், வடக்கு மாகாண சபையும் இந்த விசாரணைகளை செயற்படுத்தும் முகவர்கள் அமைப்புகள் எனவும் கசிந்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை எப்படி செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பாக இருக்க முடியும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களை வடக்கு மாகாண சபை சுமத்தி வருகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு விசாரணைகளை செயற்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
போர் தொடர்பான விசாரணைகளில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் சர்வதேச நிறுவனங்கள் தலையீடுகளை மேற்கொள்ளும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmr1G.html


தமிழர்களுடன் இணைந்து செல்லும் அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது!- ஹக்கீம்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 02:08.13 PM GMT ]
தமிழ் சமூகத்தோடு இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அலிஸாஹிர் மௌலானாவை ஆதரித்து இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழுச்சி பெற்ற வியூகமாக அது இருக்கும்.
சரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்பினரை கிழக்கில் ஆளும் அதிகார வர்க்கமாக மாற்றிக் காட்டிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு உண்டு.
அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்த ஜனநாயகப் பாதையை நாம் கிழக்கு மண்ணிலே முன்னுதாரணமாய் நிலைநிறுத்திக் காட்டியிருக்கின்றோம்.
அதனை சாணக்கியமாக தீர்க்க தரிசனமாகச் நுணுக்கமாக செய்து இந்த நெருக்கடியான ஜனநாயகக் கூட்டை பிளவுகள் இல்லாமல் முழு நாடும் பெருமைப்படக் கூடிய வகையில் கொண்டு நடத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை நான் பாராட்டாமல் இருக்க முடியாது.
அடுத்து வருகின்ற அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு முன்பு அரசாங்கத்தில் வகித்த பதவிகளை விட உயர்வான அந்தஸ்தோடு அதிகாரத்தோடு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறையாத அணியோடு பதவியில் அமரும். அப்போது இந்த ஏறாவூர் வரலாறு காணாத அபிவிருத்தியைக் காணும்.
வேறுபாடுகளை நாம் குழிதோண்டிப் புதைத்து விட்டு மைத்திரி யுகத்தில் ரணில் விக்கிரமசிங்ஹ எனும் சாதனையாளனின் வழி நடத்தலில் உலகம் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை நாம் அடையவேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட அரசாங்கம் பெரும்பான்மையோடு அமைகிற போது அத்தனை அபிவிருத்திகளும் உங்கள் காலடிகளை நாடி வரும்.
இந்தத் தேர்தலின் மூலம் கடந்த 10 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த இருண்ட யுகம் இல்லாமலாகி விடும்.
சிறுபான்மைச் சமூகங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட யுத்தம் முடிந்ததின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடி தங்களை வளர்த்துக் கொண்ட ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை வலிய வம்புக்கிழுக்கிற நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம்.
மிக மோசமான கீழ்த்தரமான அரசியலைச் செய்து வந்தவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றோம்.
கிறீஸ் பூதம் எனும் விசித்திர அட்டகாசத்தைக் காட்டி சிறுபான்மை இனங்களை சீண்டிப்பார்த்த சீரழிந்த ஆட்சியாளர்கள் இன்று பதுங்கியிருக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக்சவின் சாஸ்திரக்காரனுக்கு நமது சிறுபான்மை இனங்கள் ஆண்டாண்டு காலம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஏனென்றால் மஹிந்தவுக்கு ஆட்சியைப் பிடிக்க ஆசை வார்த்தை காட்டி சாஸ்திரம் சொன்னதால்தான் மஹிந்த தனக்கிருந்த 2 வருட ஆட்சியையும் முன் கூட்டியே கலைத்தார்.
அதுதான் சிறுபான்மை இனங்களுக்கு விமோசனமாய் அமைந்தது. நாட்டுப் பற்று என்ற போர்வையில் போலித்தனமான முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளுகின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் மஹிந்த கடைப்பிடித்தார்.
வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம்.
முன்னாள் ஆட்சியாளர் மஹிந்தவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அயராது பாடுபட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகள், இப்பொழுது நாங்கள் மைத்திரியின் ஆட்கள் என்று வெட்கமின்றி வேசம் போடுகிறார்கள்.
நாட்டின் வங்குரோத்து அரசியலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இப்பொழுது என்ன முகத்தோடு வந்த வாக்குப் பிச்சை கேட்கிறார்கள் என்பது வியப்பாகவுள்ளது.
ஒரே கல்லிலே இரண்டு மாங்காய்கள் விழுகிற ஒரு காலம் கனிந்திருக்கின்றது.
காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய இரு பிரதேசங்களிலும் ஸ்ரீலமுகாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ{க்கு சவாலாக இருக்கின்ற இரண்டு அரசியல்வாதிகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற ஓட்டை வண்டியிலே ஏறிக்கொண்டு இடைவழியில்“பஞ்சராகி” நிரந்தரமாகவே வீட்டுக்குப் போகப்போகின்ற சூழ்நிலை வந்திருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் புதிய எழுச்சிக்கும் போராட்டத்திற்கும் முன்னால் இந்த ஓட்டை வண்டி அரசியல்வாதிகளால் ஒருபோதும் நின்று தாக்குப் பிடிக்க முடியாது என்றார்.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலமுகா பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அலிஸாஹிர் மௌலானா, வேட்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாறூக் ஆகியோருட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கைகளில் மாற்றம்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 03:07.05 PM GMT ]
இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி மாதம் 8ம் திகதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் இவ்வாறு கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளது.
சீனா, இலங்கையில் மக்கள் தொடர்பு விவகாரங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சாத்திய ஆய்வுகளை செய்யாது, சுற்றாடல் பாதிப்புக்களை கருத்திற் கொள்ளாது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்திருந்தது.
எனினும், புதிய அரசாங்கம் இந்த திட்டங்களை இடைநிறுத்தி சாத்திய ஆய்வுகளையும், சுற்றாடல் பாதிப்பு குறித்த விபரங்களையும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனா தொடர்பிலான நன்மதிப்பை உயர்த்தும் முனைப்புக்களில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய செய்தி முகவர் நிறுவனங்கள் ஒன்றும் இயங்காத போதிலும் சீனாவின் ஓinhரய செய்தி சேவை இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுநீரக வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு சீனா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாகவும், இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயாகும் எனவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம்: ரணில் விக்ரமசிங்க
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 03:23.39 PM GMT ]
எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற் பிராந்திந்தியத்திற்குள் மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம் என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கையில் இம்மாதம் 17ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரணில்,
எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற் பிராந்திந்தியத்திற்குள் நுழைந்து மீன்பிடிக்க அனுமதி வழங்க மாட்டோம். இந்திய மீனவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அறிவுரை கூறியிருக்கிறோம்.
எங்கள் கடற்பரப்புக்குள் இழுவைப்படகு மூலம் மீன்பிடிக்க சந்தர்ப்பம் வழங்கமாட்டோம் என்று. அதேபோன்று இந்திய அரசும் எங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. சிறிய காலத்திற்கு ஆழ் கடலில் மீன்பிடிக்க அனுமதி கேட்டது. நாங்கள் அனுமதி வழங்கவில்லை.
இந்த கடற்பிரதேசம் எங்களுக்கு சொந்தமானது எங்கள் பகுதியில் எங்கள் மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்குவோம் என்றார். அதேவேளையில் மன்னார் நகரம் இந்தியாவிற்கு அருகாமையில் இருப்பதால் இந்திய பொருளாதார உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmr2C.html

Geen opmerkingen:

Een reactie posten