கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. இந் நிலையில் கார்த்திகாவைக் கொலை செய்தார் என்று நம்பப்படுபவர், பெண்ணுடன் தங்கியிருந்த விடுதியில் இருந்து பெண்ணின் சடலம் அடங்கிய சூட்கேஸை சிரமத்துடன் சுமந்துவரும் CCTV காணொளி காட்சியை அதிர்வு இணையம் தற்போது பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களீன் உதவியை நாம் கோரியுள்ளோம். யாழ் பெண்னுடன் ஒன்றாக ஒரு ஹோட்டல் அறையில் இவன் தங்கியுள்ளான். பின்னர் அங்கே இருந்து , ஒரு சூட்கேசை சுமக்க முடியாமல் சுமந்து சென்றுள்ளான். இந்த அனைத்து காட்சிகளும் CCTV கமராவில் மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இதனை அதிர்வு இணையம் தற்போது பெற்று வெளியிட்டுள்ளது. இவரை எவராவது அடையாளம் கண்டால் , தயவு செய்து யாழ் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும். இந்தப் பெண் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது புரிகிறது. மேலும் இதில் பல மர்மங்கள் அடங்கியுள்ளது. அவை அனைத்தையும் எமது அதிர்வின் புலனாய்வு நிருபர் வெகு விரைவில் வெளியிட உள்ளார். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten