தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 augustus 2015

சமஸ்டி கோரிக்கையானது அடைய முடியாத கனவு: சம்பிக்க

வடக்கிற்கு, சமஸ்டி வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கையினை, ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரும்,  அமைச்சருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிலியந்தலையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஸ்டி கோரிக்கையினை மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் அதிகளவில் குற்றம்சாட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகளை மகிந்தவின் அதிகம் நெருக்கமானவரான ஜீ.எல்.பீரிஸ் அவர்களே முன்வைத்தார்.
அந்த திட்டத்தை ஜாதிக ஹெல உறுமய கட்சியே அன்று தோற்கடித்தது. இனி அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்நோக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகிந்த ராஜபக்ஸ கூட நாட்டின் ஒருமைப்பாட்டினை இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
1949 ல் இருந்தே இந்த சமஸ்டி கோரிக்கையானது அடைய முடியாத அழகான கனவாக இருந்து வருகிறது.
சமஸ்டி கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை அவசியம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் 10 அல்லது 15 ஆசனங்களையே பெறமுடியும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten