தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 augustus 2015

இம்முறை தேர்தலைப் புறக்கணிப்போம்: திருமலையில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

அடையாள அட்டைக்கமைய ஷிரந்தி ராஜபக்ச என்பவர் ஆண்!- அநுரகுமார
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 06:12.56 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் தேசிய அடையாள அட்டைக்கமைய அவர் ஒரு ஆண் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
தேசிய அடையாள அட்டைக்கமைய ஷிரந்தி ராஜபக்ச என்பவர் ஆண், இதற்கு பின்னர் அவரை மெடம் ஷிரந்தி (Madam Shiranthi) அல்ல, (Mister Shiranthi) மிஸ்டர் ஷிரந்தி என்றே அழைக்க வேண்டும். இதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை ரகர் விளையாட்டு வீரர் தாஜுடீன் கொலை செய்யப்பட்டார், ஆனால் வாகன விபத்தில் உயிரிழந்தார் என்று கூறினார்கள்.
இது ஒருவகை விபத்தென மேல் மாகாண சிரேஷ்ட காவல்துறை அதிகாரி அறிக்கை தயாரித்து கூறினார். ஆனால் என்ன நடந்தன.
காவல்துறையினரிடம் நாங்கள் வேண்டுகோள் முன்வைத்தோம் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, இன்று உண்மை வெளியில் வந்தது.
அவர் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவரது தலையில் மூன்று ஓட்டைகள் உள்ளது, கை, கால்கள் உடைக்கப்பட்டு வாகனத்துடன் தீ வைக்கப்பட்டுள்ளத்து.
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இறுதியில் இதனை தடுக்க முடியாது சிக்கப்போவது ராஜபக்சவின் மகன். மகன் தவறு செய்து சிறை செல்வதனை தந்தையினால் தாங்கிக் கொள்ள முடியுமா?
தாங்கிக்கொள்ள முடியாது. எனவே தந்தை அரசியலுக்குள் நுழைந்து கொண்டு மகனை காப்பற்ற முயற்சிக்கின்றார் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இம்முறை தேர்தலைப் புறக்கணிப்போம்: திருமலையில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 06:35.37 AM GMT ]
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் காணாமல்போனவர்களளின் உறவுகள் கண்டன போராட்டம் ஒன்றை இன்று  காலை 09.30 மணிக்கு திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக நடத்தினர்.
திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் மற்றும் திருகோணமலை மாவட்ட கானாமல் போனோர் சங்கத்தினரால் இக் கவன ஈர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்போராட்டத்தில் திருகோணமலை மட்டக்களப்பு வவுனியா அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து உறவுகளை இழந்தவர்கள் பங்கேற்றனர்.
பல அரசியல்வாதிகள் காணாமல்போனோர் தொடர்பில் பேசுகின்ற போதிலும் இதுவரைகாலமும் எந்தவிதமான முடிவுகளையும் பெற்றுத்தரவில்லை எனவும் அதன் காரணத்தினால் இம்முறை தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten