[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 08:44.12 AM GMT ]
இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரின் பாரியார், ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, நுவரெலியா மாவட்ட வேட்பாளர் ரேணுகா ஹேரத் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிடும் யோகராஜன் அவர்களின் மக்கள் சந்திப்பு நானுஓயா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன் போது மக்கள் மத்தியில் யோகராஜன் கருத்து தெரிவிக்கையில்,
2015ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இதற்கு பல காரணங்கள் உள்ளன மலையக மக்கள் 200 வருடகாலமாக அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வரும் இம்மக்களின் வீடுகளை மாற்றி தனி தனி வீடுகளை கட்டி கொடுப்பதற்கு 4 வருடகாலமாக பாராளுமன்றத்தில் பேசியதன் காரனமாக இன்று ஜக்கிய தேசிய கட்சி சில மாதகாலமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
அத்தோடு தோட்டங்களில் பயிர்செய்கை மேற்கொள்வதற்காக 2 ஏக்கர் காணி வழங்க 03 வருடகாலமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததன் காரணமாக இதனை 11 கம்பனிகள் வழங்குவதாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் பெருந்தோட்டதுறை அமைச்சும் இதனை ஏற்றுக்கொண்டதாக இவர் தெரிவித்தார்.
எதிர் காலத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஜக்கிய தேசிய கட்சி பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கபடவுள்ளது.
இதேவேளை மலையகத்திற்கு தனியான பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதற்கு நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமாகும்.
அத்தோடு படித்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கவும் நுவரெலியா மாவட்டத்தில் தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கபடவுள்ளது.
எனவே மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்ககூடியவர்களுக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நறுமணம் கமழுகின்ற பல வர்ண மலர்களை கொண்ட தட்டுக்கா குற்றம் புரிந்தவர்கள் குழுமியிருக்கும் பாத்திரத்துக்கா வாக்களிப்பது?
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 09:35.36 AM GMT ]
பசறையில் நடைபெற்ற ஐ.தே.க தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தின் சார்பாக போட்டியிடும் ஜ.தே.க வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பண்டாரவளை, வெலிமடை, ஊவா பரணகமை, பசறை ஆகிய இடங்களில் 01.08.2015 அன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் தொடர்ந்து பேசுகையில்…
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறபோகும் பொது தேர்தல் மிக முக்கியமானதாகும். நல்லாட்சிக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கும் இடையிலான போட்டியே இத் தேர்தலாகும்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான நானும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவும் இணைந்தே நல்லாட்சியை முன்னெடுக்கின்றௌம்.
ஐ.தே.க வுடன் நாட்டின் 161 அமைப்புகளுடன் கைகோர்த்து ஜக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் நாம் தேர்தல்களத்தில் இறங்கியுள்ளோம். இம் முன்னணியில் நறுமணங்களைக் கொண்ட பல வர்ணங்களையுடைய மலர் குவியலை போன்று பல்வேறு அரசியல, தொழிற்சங்க, சமூக அமைப்புக்களைக் கொண்ட பலரும் எம்முடன் இணைந்துள்ளனர்.
எமது வெற்றியோடு ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரையும் சேர்த்து நல்லாட்சியை தொடர்ந்து முன்னெடுப்போம்.
ஆனால், ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற பெயரில் திருடர்களும் மோசடிகாரர்களும் இணைந்த கொடுங்கோல் ஆட்சியை முன்னெடுக்கபோகும் கும்பலொன்றும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றது.
இவ்விரு தரப்பினரையும் சீர்தூக்கி பரிசீலித்து எதிர்வரும் 17ம் திகதி வாக்களிக்க வேண்டும்.
ரணில் புதிய நாட்டை உருவாக்குவார்: மஹிந்த உறுதி
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 10:28.29 AM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் புதிய நாட்டை உருவாக்குவார் அது உண்மையான விடயம் தான் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரித்தால் இலங்கை வரை படத்தில் மாற்றம் ஏற்பட்டு புதிய நாடு உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கினை ஒன்றிணைத்து விட்டு,வரக்கூடிய மீதமுள்ள இலங்கையின் ஏனைய பகுதிகளையே புதிய நாடு என ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுகின்றார்கள் என மகிந்த தெரிவித்துள்ளார்.
எந்தகட்சியும் இலங்கையினை துண்டாட நான்அனுமதிக்கமாட்டேன்.
நாங்கள் தென் மாகாணங்களின் அபிவிறுத்தி நடவடிக்கைகளை வரையறுக்கவில்லை. எல்லா மாகாணங்களுக்கு சம அளவிலான அபிவிறுத்திகளையே முன்னெடுப்பதே எமக்குதேவை எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
யார் எவ்வாறு கருத்து வெளியிட்டாலும் இந்நாட்டை பிரிப்பதற்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITXSVms3I.html
Geen opmerkingen:
Een reactie posten