[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 12:35.08 PM GMT ]
தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எப்படி இந்தியாவைப் புறக்கணிக்க முடியும்? உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிறிலங்காவின் இறக்குமதிகள் இந்தியாவில் இருந்து தான் மேற்கொள்ளப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பெருமளவு இந்திய நிறுவனங்கள் இங்கு செயற்படுகின்றன. பிரதம நிறைவேற்று அதிகாரிகளாக இந்தியர்கள் உள்ளனர்.
எமது நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வது பற்றியே நாம் சிந்தித்தோம். அபிவிருத்தியை வேகப்படுத்துவதே எமது தேவையாக இருந்தது. இதனால் தான் சீனாவின் பங்கு நாடப்பட்டது.
ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அணிசேரா கொள்கையே பின்பற்றப்பட்டது. எவருக்கு எதிராகவும் எவருடனும் அணிசேருவதில்லை என்ற கொள்கையே முன்னைய அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது.
அதே கொள்கையையே மீண்டும் மீண்டும் நாம் பின்பற்றுவோம்.
இந்தியாவுடன் உள்ளதைப் போலவே, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியான உறவுகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
என்னை அதிபர் அடித்தார்! அதை வீட்டில் சொன்னால் அப்பா அதிகமாக அடிப்பார்: ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 12:37.56 PM GMT ]
கொழும்பு அசேகா கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசாங்கம் இலவச கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும். இலவச கல்வி முறையை மேலும் வலுப்படுத்தி, நாட்டின் பிள்ளைகளை புதிய தொழிற்நுட்பத்துடன் மேலும் முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறந்தது மாணவர்களுக்கு கிடைப்பது போல வர்த்தக சமூகத்தில் கெட்டவைகளையும் பெற்றுக்கொள்ள பிள்ளைகள் முயற்சிக்கின்றனர். கெட்டவைகளை பிள்ளைகள் தவிர்த்து கொள்ள வேண்டும்.
நான் படித்த தோப்பாவெவ பாடசாலையின் ஆசிரியர்கள் என்னை எந்தளவுக்கு என்னை பிரம்புகளால் அடித்துள்ளனர் என்பது எனக்கு நினைவில் உள்ளது. அடிக்கும் போது வகுப்பில் பிள்ளைகள் சத்தமிடுவார்கள்.
அதனை பார்த்து கொண்டிருந்த பாடசாலை அதிபர் என்னை அடித்திருக்கலாம். ஆனால் வீட்டுக்கு சென்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. கூறினால், அதனை விட அதிகமாக அடி வாங்க வேண்டும் வரும் என்று நான் அறிந்திருந்தேன்.
என்மீது எந்த தவறும் இல்லையொன்றாலும் ஆசிரியர் அடித்தார் என்பதற்காக எனது பெற்றோர் காவற்துறை நிலையத்திற்கு செல்ல மாட்டார்கள். வேறு சட்டத்தையும் நாடமாட்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்களுடன் இருக்கும் பாதாள உலக குழுவினரை கைது செய்ய தேடுதலை ஆரம்பித்துள்ள காவற்துறையினர்
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 12:55.41 PM GMT ]
இந்த பாதாள உலக குழுவினரில் பெரும் குற்றவாளிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பல்வேறு வேட்பாளர்களிடம் ஆயுதம் தரித்த 100க்கும் மேற்பட்ட பாதாள உலக குழுவினர் இருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்த இவர்களை பிரதான கட்சிகளை சேர்ந்த சில வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் தமது பாதுகாப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக வரவழைத்துள்ளனர்.
இந்த குற்றவாளிகளை தவிர மேலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் நாட்டில் இருக்கும் நபர்கள் வெளியேறுவதை தடுக்கவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
காலம் கனியும் வேளையில் நமது ஒன்று திரண்ட பலம் அவசியம்- கரவெட்டியில் சி.சிறீதரன்
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 01:00.14 PM GMT ]
யாழ்ப்பாணம் கரவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 ல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தொடர்கையில்,
வரலாற்றில் பல்வேறு தடைகளையும் கடந்த வார்த்தைகளால் வடிக்க முடியாத தியாகங்களை செய்து இன்று தமிழர்களாகிய எங்களின் நீண்ட கால உரிமைப் பிரச்சனை உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிராந்திய உலக வல்லரசுகளின் பார்வைகளில் முக்கிய விடயமாக இனங்காணப்பட்டுள்ள சூழலில்தான் .இந்தத் தேர்தல் வந்திருக்கின்றது.
உலக அளவில் இந்தத் தேர்தல் எதிர்ப்பார்ப்புக்களை கிளப்பியிருக்கின்றது. இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்கள் தங்கள் ஜனநாயக பலத்தை எவ்வாறு முன்னெப்பொழுதையும் விட உச்சமாக ஒரு தேசியக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக வெளிப்படுத்த வேண்டியது தமிழர்கள் முன் நிற்கும் எமது கடமை.
இதையே உலகத்தின் முக்கிய தலைவர்களும் இங்குள்ள தமிழ் கட்சிகளிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்கள். நீங்கள் ஒரு தலைமைத்துவம் ஊடாக உங்கள் பிரச்சனையை சொல்லுங்கள் என அவர்கள் கூறியுள்ளார்கள்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டவர்களால் எமது நீண்ட உரிமைப் பிரச்சனை அபிவிருத்தி வேலை வாய்ப்பு வசதிகள் என்ற பாணியில் கூறப்பட்டதால் எமது அபிலாசைகளை கொண்டு செல்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே இம்முறை வருகின்ற இந்த வரலாற்று சந்தர்ப்பமான தேர்தலில் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒட்டுமொத்த வாக்குகளையும் அளித்து எமது மக்களின் அபிலாசைகளை வெல்ல பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் காலம் கனிகின்ற வேளையில் அதை சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITXSVms4J.html
Geen opmerkingen:
Een reactie posten