ரணிலை விட மகிந்த பிரதமர் ஆவதையே சிங்களவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் !
[ Aug 05, 2015 05:52:07 AM | வாசித்தோர் : 9795 ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிக மக்கள் அதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.நாடு முழுவதிலும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு பொருத்தமான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என பெரும்பாலான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது தமிழ் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள். 62 வீதமான தமிழர்கள், 71 வீதமான இந்திய வம்சாவளித் தமிழர்கள், 62 வீதமான முஸ்லிம்கள் ரணில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என கருதுகின்றனர்.
ஆனல் சிங்களப் பகுதிகளைக் கணக்கில் கொண்டால் , 36% வீதமானவர்கள் மகிந்த பிரதமராக வேண்டும் எனவும். 32% விகிதமானவர்கள் ரணில் பிரதமர் ஆகவேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். மாகாண அடிப்படையாக கருதுமிடத்து மேல், மத்திய, வடக்கு, கிழக்கு, வடமேல் , ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ரணில் விக்ரமசிங்க பிரதமராவதனை விரும்புகின்றனர். தென் மற்றும் வட மத்திய மாகாண மக்கள் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராவதனை விரும்புகின்றனர். எப்படி பார்த்தாலும் இம் முறை கூட தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் வாக்கு ரணிலுக்கு மிக அவசியமானதொன்றாக இருக்கிறது.
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள ஈழத் தமிழர் விவகாரம் !
[ Aug 05, 2015 06:30:18 AM | வாசித்தோர் : 18245 ]
ஏற்கனவே முன் நாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிக் கிரியைகளுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தார் ஜெயலலிதா. கேரளா , ஆந்திரா , கன்னடா , மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரமுகர்கள் அப்துல் கலாமின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த அம்மா மட்டும் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சாக்குப் போக்கை சொல்லி தட்டிக் கழித்தார். இதனை தமிழ்காத்தில் உள்ள பல மக்கள் கண்டித்தார்கள். இந்த சூடு ஆற முன்னரே , தமிழக சிறப்பு முகாமில் இருந்த ஈழத் தமிழர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு , தன்னைப் பார்க வந்த தனது மனைவியோடு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தூக்க மாத்திரைகளை உண்ட அவர்கள் இருவரும் மயங்கிய நிலையில் இருந்தவேளை அவர்களை பொலிசார் எடுத்துச் சென்று , அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளார்கள். இன் நிகழ்வானது தமிழகத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கியூ பிரிவு பொலிசார் , ஈழத் தமிழர்கள் பலரை கைது செய்து அடைத்து வருகிறார்கள். இதுவரை காலமும் பலர் கலைஞரை குற்றஞ்சாட்டி வந்தார்கள். ஆனால் அவர் ஆட்சியில் இருந்த வேளையில் இந்த அளவுக்கு கியூ பிரிவினர் அட்டகாசம் இருக்கவில்லை. அவரை ஈழத் தமிழர்கள் சந்தித்து உரையாடக் கூடிய வசதிகள் கூட இருந்தது.
ஆனால் ஜெயலலிதா அம்மையாரை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட பலர் முயன்றும் சந்திக்க முடியவில்லை. ஈழத் தமிழர்களை சந்திக்க கூடாது என்ற மன நிலையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சில தீர்மானங்களை சட்டசபையில் நிறைவேற்றிவிட்டு. மக்கள் ஆதரவை பெற்று பின்னர் அப்படியே மெளனமாக இருப்பதே இவர் நிலையாக உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/4405.html
Geen opmerkingen:
Een reactie posten