தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 augustus 2015

இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்!- கர்தினால்

இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இன, மத பேதங்களைக் களைந்து நல்லவர்களை நாடாளுமன்றிற்கு மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
இன மற்றும் மத ரீதியான அரசியல் கட்சிக் கட்டமைப்பு எமது நாட்டுக்கு பொருத்தமுடையதல்ல.
நாட்டில் கிறிஸ்தவ கட்சியொன்று மட்டுமே இல்லை.
அவ்வாறான ஓர் கட்சியை உருவாக்க நாம் இடமளிக்க மாட்டோம்.
அவ்வாறு செய்தால் அது எமது நாட்டுக்கு நாம் இழைக்கும் பாரிய துரோகமாகவே கருதப்பட வேண்டும்.
தனியொரு நபரின் அதிகாரத்தை குவிக்கும் நிலைமை உருவாவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
நாட்டு மக்கள் மதி நுட்பத்துடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.
போதைப் பொருள், மதுபானம் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடிய, நாட்டை பொறுப்பேற்கக் கூடியவர்ளை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டுமென கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் இலங்கை புத்திஜீவிகள் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திபில் பங்கேற்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten