[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 05:13.49 PM GMT ]
கடத்தல்கள், சித்திரவதைகளில் ஈடுபடுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவுஸ்திரேலிய பொலிஸார் உதவிகளை வழங்கியுள்ளனர்.
கருவிகள், இயந்திரங்களை வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் என பல்வேறு வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது இலங்கையிலிருந்து அதிகளவில் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அகதிக் கோரிக்கையாளர்கள் செல்லத் தொடங்கினர்.
இதனை தடுக்கும் நோக்கில் இலங்கையுடன் அவுஸ்திரேலியா இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டது.
பல ஆண்டுகளாக இலங்கை புலனாய்வுப் பிரிவிற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் உதவிகளை வழங்கியுள்ளனர்.
அலுவலகத் தளபாடங்கள் முதல் அதி நவீன கருவிகள் வரையில் அவுஸ்திரேலியா இலங்கை புலனாய்வு பிரிவிற்கு வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளை வான்களில் கடத்தல்கள் இடம்பெற்றதாகவும் இதனை இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டதாகவும் பரவலாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
அவுஸ்திரேலியா இலங்கைப் புலனாய்வுப் பிரிவிற்கு வெள்ளை வான் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 05:34.32 PM GMT ]
இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 20 ஆசனங்களை வெற்றிக்கொள்ள முடியும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் சிங்குவா செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி பொதுத்தேர்தலில் வெற்றிப்பெறுமானால் கூட்டமைப்பு வெளியில் இருந்து அதன் ஆதரவை முன்னணியின் அரசாங்கத்துக்கு வழங்கும்.
எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையாது என்று பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபாலவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமானால் அதனுடன் சேர்ந்து இயங்குவது முடியாத காரியம் என்று பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITXSVms6H.html
Geen opmerkingen:
Een reactie posten