இலங்கையில் உள்ள ரகசிய சித்திரவதைக் கூடங்களில் இருந்து , தற்போது வெளியேறிய நபர்கள் தமது சாட்சியங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வகையில் இதனை சர்வதேச நிறுவனம் ஒன்று ஆவணப்படுத்தி வருகிறது. அதில் இருந்து வெளியான சில தகவல்கள் இதோ...
என்னை சிங்கள இராணுவத்தினர் கைகளை இறுக கட்டி ஒரிடத்தில் அடைத்தனர். அங்கு என்னை போல ஆண்கள் பல பெண்களும் ,கண்ணில் ஒரு மிரட்சியோடு இருந்தார்கள். அது எந்த இடம் என்று எனக்கு தெரியவில்லை. சிறிது நேரத்தில் அங்கு இராணுவ அதிகாரி ஒருவர் விஸ்கி பாட்டிலோடு வந்தார். அவர் விடுதலை புலிகளை நாங்கள் தோற்கடித்து விட்டோமென்று சொல்லி மது குடித்துக்கொண்டே நடனம் ஆடிக்கொண்டிருந்தார். பின் என்னை அவரின் முன்னால் மற்ற இராணுவத்தினர் அடித்தனர். அதன்பின் என் முகத்தை தண்ணீரில் முக்கி அடித்தனர். இதனால் நான் ...சுய நினைவை இழந்துவிட்டேன். இது போதாதென்று என்னை பாலியல் துன்புறுத்தல் வேறு செய்தார்கள். அதற்காகவே இரண்டு நபர்கள் இருந்தார்கள். அவர்கள் என் அந்தரங்க பகுதிகளை தொட்டனர். எனக்கு அது அருவருப்பு தந்தது.
அதன் பின் அவர்கள் என் வாயில் அவர்களது ஆணுறுப்பை திணித்தார்கள். என் பிட்டத்திலும் அவர்களது அத்துமீறல் தொடர்ந்தது. அது கூடவே மிக கொடூரமான வார்த்தைகளால் தமிழர்களை திட்டிக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் தமிழ் ஆண்களை நாய்கள் என்றும் தமிழ்பெண்களை சிங்கள ஆண்களுக்கு செக்ஸ் தேவையை நிவரத்தி செய்பவர்கள் என்றும் சொல்லிக்கொண்டெ எங்களை துன்புறுத்தினார்கள். இந்த கொடுமை எங்களுக்கு புதிய ஆட்சி மாற்றத்தின் மூலம் நீங்கிவிடுமென்று நினைத்தோம் ஆனால் அது மேலும் கொடுமையானதாகவே இருந்தது”.
மேலே உள்ளது உலகில் வேறு யாருக்கோ நடந்தது இல்லை தோழர்களே.. உலகில் மூத்த இனமாம் தமிழினத்திற்கு முள்ளிவாய்க்கால் பேரழிப்பிற்கு பின் தொடரும் இனப்படுகொலைக்கான சாட்சியங்கள். ஆட்சி மாற்றத்திற்கு பின் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதென்றும் அதனால் இலங்கையை இப்போது சர்வதேச மட்டத்தில் விசாரிப்பது நல்லது இல்லையென்றும் கூறுகிறார்கள். இனப்படுகொலையில் கூட்டு குற்றவாளி நாடுகளான இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்டவை பொய்சொல்லிக் கொண்டிருக்கும் போது இல்லையில்லை இன்னும் ஈழத்தில் இனப்படுகொலை நடந்துக் கொண்டிருக்கிறதென்று உலகத்தின் முன்னால் ஆதாரங்களோடு ஐநா மூவர் குழுவில் அங்கம் வகித்திருந்த யாஸ்மின் சூகா அம்மையார் நிருபித்திருக்கிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட ஆதாரங்களே சாட்சி.
அந்த அறிக்கையில் மாற்று கருத்துகள் நமக்கு இருக்கவே செய்கின்றன அது வேறு விசயம். ஆனால் அதையும் தாண்டி அவரின் சமீபத்திய 2009 லிருந்து 2015 வரையிலான இலங்கை படையால் தமிழர்களுக்கு இழைக்கப்படும் சித்ரவதைகள் குறித்தான அறிக்கையில் இன்னும் கொடூரமான ஆதாரங்கள் நம்மால் எழுதவே முடியாத கொடுமைகளை பட்டியலிட்டிருக்கிறார். இவ்வளவுக்கு பிறகும் நாமே இன்னும் இதை போர்குற்றமென்று சொல்வதா ? இல்லை இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து ஐநா போன்றவை சொல்லும் உள்நாட்டு விசாரணையை ஏற்கவேண்டுமா? முடிவு நம் கையில் தான். எத்தகைய விசாரணை நடைபெறவேண்டும் என்று கூற அமெரிக்கா யார் ? விசாரணையின் வீரியத்தை தனக்கு ஏற்றால் போல் கூட்டி குறைக்க சர்வதேச நாடுகள் யார் ? பாதிக்கப்பட்ட இனம் நாங்கள். நாங்கள் தான் இலங்கை மீது எந்த வகையான விசாரணை நடைபெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராடவேண்டும்.
இதுவே எமது விடுதலைப் பாதையை சரியான வழிக்கு கொண்டு வரும். ஈழத் உள்ள தமிழர்கள் இதனை நன்றாகப் புரிவது அவசியம். சுமந்திரன் சொல்கிறார் , சம்பந்தர் சொல்கிறார் என்று ஓணாய்கள் சொல்வதற்கு எல்லாம் நாம் தலை ஆட்ட முடியுமா ? சிந்தியுங்கள் மக்களே..
http://www.athirvu.com/newsdetail/4375.html
Geen opmerkingen:
Een reactie posten