தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 augustus 2015

தலைவரது பாதுகாப்பாளர் பொட்டு அம்மானின் பிரிவில் உள்ளவர்களும் தேர்தலில் !

பற்கள் உடைக்கப்பட்டு, கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலையான வசீம் தாஜூதீனின் !

[ Aug 05, 2015 07:50:02 AM | வாசித்தோர் : 19040 ]
2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற விசேட வைத்திய குழு முன்னிலையிலேயே அவரது ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு, ஜனாஸாவை தோண்டியெடுக்கும் திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடமுடியாது என்று இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பற்கள் உடைக்கப்பட்டு மற்றும் கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுத்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை இரகசிய பொலிஸார் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கொலையில் ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ நேரடியாக தொடர்புகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

தலைவரது பாதுகாப்பாளர் பொட்டு அம்மானின் பிரிவில் உள்ளவர்களும் தேர்தலில் !

[ Aug 05, 2015 06:40:59 PM | வாசித்தோர் : 11955 ]
முன் நாள் விடுதலைப் புலிகள் பலர் இணைந்து , "ஜனநாயகப் போராளிகள்" என்ற கட்சியை ஆரம்பித்து நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட உள்ளார்கள். இவர்களில் , தேசிய தலைவரது பாதுகாப்பு பிரிவில் இருந்த வேந்தன். மற்றும் பொட்டு அம்மான் பிரிவில் இருந்த கங்கை ஆகியோர் போட்டியிடுவது சிங்களப் பகுதிகளில் பெரும் சலசலப்பை தோற்றுவித்துள்ளது. புலிகள் என்றால் ஆயுதத்தை தூக்கி சண்டை போடுபவர்கள் என்ற , பேச்சுப் போய் ஜனநாயக வழியிலும் எம்மால் போரட முடியும் என்று இவர்கள் காட்டியுள்ளார்கள். இருப்பினும் இவர்களை கடந்த 15 நாட்களாக சந்தித்து வரும் ஊர் மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? அதே கோடு-கோடு போட்ட ஒரே சட்டையோடு தான் இவர்கள் அனைத்து கூட்டங்களுக்கும் செல்கிறார்கள் என்றும். இவர்களிடம் மாற்று துணி கூட இல்லை என்றும் கூறுகிறார்கள்.
இதனால் யாழில் உள்ள பொதுமக்கள் பலர் அவர்களுக்கு மாற்றுத் துணிகளை தாமே முன் வந்து வாங்கிக் கொடுத்துள்ளார்கள். அதுபோக சிலர் தமது ஆட்டோக்களில் அவர்களை ஏற்றிச் சென்று உதவுகிறார்கள். மேலும் சிலர் நோட்டிஸ் அடிக்க தாமே உதவுகிறார்கள். இப்படி மக்கள் ஆதரவு அவர்களுக்கு பெருகி வருகிறது. முன் நாள் புலிகள் உறுப்பினர்களில் ஒருவராவது பாராளு மன்றம் சென்றால் தான், அது சிங்களவருக்கு மட்டும் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நாம் கற்பிக்கும் ஒரு பாடமாக அமையும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் , ஜனநாயகப் போராளிகளை இலங்கை உளவுத்துறையின் ஆட்கள் என்று குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அது உன்மை என்றால் , அவர்கள் தற்போது சொகுசு வாகனங்களில் அல்லவா சென்றிருப்பார்கள்.
இவ்வாறு நடந்து சென்று துண்டுப் பிரசுரங்களை , கொடுக்க மாட்டார்கள். மாற்றிக்கொள்ள கூட துணிகள் இல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள் அல்லவா. எனவே புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் ஜனநாயகப் போராளிகளுக்கு உதவவேண்டும். அவர்களது யாழ் அலுவலக இலக்கம் இதோ உள்ளது. துளசி என்னும் நபரே அங்கே பொறுப்பாக உள்ளார். எனவே தமிழர்கள் , தொடர்புகொண்டு ஜனநாயகப் போராளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்று தமிழ் உணர்வாளர்கள் வேண்டி நிற்கிறார்கள்.
Tel: 0094213003600   
துளசி

http://www.athirvu.com/newsdetail/4411.html

Geen opmerkingen:

Een reactie posten