தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 augustus 2015

பிள்ளையானுக்கு தேசிய பட்டியல் ஊடாக ஆசனம் வழங்கும் சுதந்திர முன்னணி!

பாதாள உலகக் குழுக்களுடன் வேட்பாளர்களுக்கு தொடர்புண்டா? விசாரணை நடத்துமாறு ரணில் உத்தரவு
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 01:53.45 AM GMT ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரேனும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றார்களா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி புளுமென்டல் பிரதேசத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவின் புலனாய்வுப் பிரிவு, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட தரப்புக்களின் ஊடாக தகவல்கள் திரட்டப்பட உள்ளன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விடயம் குறித்த அறிக்கை எதிர்வரும் வாரமளவில் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் அபிமானத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்!- மஹிந்த
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 02:08.10 AM GMT ]
நாட்டின் அபிமானத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியம் என குருநாகல் மாவட்ட முதன்மை வேட்டபாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில்,
நாங்கள் கடந்த 30 வருடங்களாக இந்நாட்டில் தீவரிவாதிகளுக்கு முகம் கொடுத்தோம். வடக்கில் இளைஞர்களை யுத்தத்திற்கு இழுத்து சென்றது மாத்திரமின்றி வரமுடியாதென்றவர்களை கொலை செய்தார்கள்.
வடக்கின் இந்நிலைமையை மாற்றியுள்ளோம். சிலர் இன்று பிரபாகரன் “அவர்கள்” என்று கூறுகின்றார்கள்.
எது எப்படியிருப்பினும் இன்று சுதந்திரம் காணப்படுகின்றது. இந்த சுதந்திரத்தை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள்.
இது எங்கள் நாடு என்ற அபிமானம் இளைஞர்களிடம் காணப்பட வேண்டும். வேறு நாடுகளுக்கு சென்று எங்களை நாட்டை குறித்து இளைஞர்கள் அபிமானத்துடன் பேச வேண்டும்.
அந்த நிலையினை நாங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வளரும் பிள்ளைகள் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ளுங்கள். கற்பதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
பல மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள். நிறைய விடயங்களை கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது தான் உலகத்தின் கதவு எங்களுக்காக திறக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்த போது செய்ய முடியாதவற்றை மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினராக எவ்வாறு செய்வார்?
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 02:27.29 AM GMT ]
ஜனாதிபதியாக இரண்டு தடவைகள் பதவி வகித்த காலத்தில் செய்ய முடியாதவற்றை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி செய்யப் போகின்றார் என மேல் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். 
இம்முறை நாடாளுமன்றத் தோதலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அவர் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு தடவைகள் பதவியிலிருந்து செய்ய முடியாதவற்றை எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினராக மஹிந்தவினால் செய்ய முடியும்.
தேர்தல் வெற்றி குறித்து பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன.
நீல அலை எனவும் பச்சை அலை எனவும் பேசப்படுகின்றது.
தேர்தலில் யார் வெற்றியீட்டுவார் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
களுத்துறையில் நீல அலையை முறியடித்து பச்சை அலை மேல் எழுந்துள்ளது.
முழு நாடுமே ஜனவரி மாதம் 8ம் திகதி ஏற்படுத்திய நல்லாட்சியை வலுப்படுத்த முயற்சிக்கின்றது.
அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டது.
இதில் எவ்வித அர்த்தமும் பொதிந்திருக்கவில்லை.
மஹிந்தவின் பஸ் அலையை விடவும், ரணிலின் மக்கள் அலை வலுவானது என நிசாந்த சிறி வர்னசிங்க களுத்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானுக்கு தேசிய பட்டியல் ஊடாக ஆசனம் வழங்கும் சுதந்திர முன்னணி!
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 02:45.42 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தோல்வியடைந்தால், அதன் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையானுக்கு தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற அங்கத்துவம் வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணக்கம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும்,  சுதந்திர முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய பொது தேர்தலில் பிள்ளையான் தோல்வியுற்றால் தேசிய பட்டியல் ஊடாக ஆசனம் வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதென தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் அமைப்பில் உறுப்பினராக செயற்பட்ட பிள்ளையான், பின்னர்  கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பதவி வகித்தார்.
கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ், தேர்தலில் போட்டியிடுவதற்காக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyITXSVms0H.html

Geen opmerkingen:

Een reactie posten