[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 07:09.35 AM GMT ]
அவர்கள் நேற்று வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை மற்றும் 2002ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தை போன்றவற்றில் சமஷ்டி கொள்கையையும், சுய ஆட்சி மற்றும் வடக்கு –கிழக்கு மாகாணங்களை தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக அங்கீகரிக்கவும் சிறிலங்கா இணங்கி இருந்தது.
அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் த ஹிந்து பத்திரிகை, ஜனநாயக போராளிகளின் இணைப்பாளர் என்.வித்தியாதரனிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த கோரிக்கைகள் யதார்த்தமானதா? என்ற கேள்விக்குப் பதில் வழங்கியுள்ள அவர் தாங்கள் புதிதாக எதனையும் கோரவில்லை என்றும் ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் இணங்கிக் கொண்ட விடயத்தையே கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஜனநாயக போராளிகள் அமைப்பு சுயேட்சையாக 10 வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணில் புத்தகத்தில் இல்லாதவற்றை கூறுகின்றார்: தினேஷ் குணவர்தன
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 07:57.12 AM GMT ]
கல்லேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
19ஆம் திருத்தச்சட்டத்தை சமர்ப்பித்தவர்களே தேசிய அரசாங்கம் உருவாக்க முயற்சிப்பதாகவும், அவ்வாறான ஒன்றை மேற்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19ஆம் திருத்தச்சட்டத்திற்கமைய அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் கட்சி தலைவர் பிரதமராவார் என ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து தொடர்பில் மிகவும் புத்திசாலி தனமாக சிந்திக்க வேண்டும் என தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனை நம்பலாம்! ரணிலை நம்ப முடியாது: உதய கம்மன்பில
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 08:04.11 AM GMT ]
வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகள் அல்ல புலிக்குட்டிகள் என்பதை மீண்டும் ஒருமுறை கூட்டமைப்பினர் நிரூபித்து விட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
தேர்தலின் பின்னர் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பினை நடத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்ற கருத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
யுத்தத்திற்கு பின்னர் வடக்கின் அரசியல்வாதிகள் தமது பாதையினை மாற்றியுள்ளனர் என நாம் நினைத்தாலும் இன்றும் அங்கு பிரிவினைவாத கொள்கையே இயங்கி வருகின்றது.
வடக்கில் அரசியல் செய்பவை நாய்க்குட்டிகள் என்ற நினைப்பில் நாம் இருந்தோம். ஆனால் அங்கு இருப்பவை நாய்க்குட்டிகள் அல்ல புலிக்குட்டிகள் என்பதை மீண்டும் ஒருமுறை கூட்டமைப்பினர் நிரூபித்து விட்டனர்.
வடக்கு, கிழக்கை இணைந்து தனி நாட்டை கோரிய புலிகளின் தலைவன் பிரபாகரனின் கொள்கையிலேயே இவர்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து வடக்கு, கிழக்கை பிரிக்க சர்வதேசமும் பிரிவினைவாத அரசியல்வாதிகளுமே முயற்சிக்கின்றனர். உலகில் பல நாடுகளில் இவ்வாறான சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்து, கியுபெக், கனடா ஆகிய நாடுகள் சுயநிர்ணய உரிமையை கோரி தம்மை தனிநாடாக மாற்றிக் கொண்டன. ஆனால் அவ்வாறு பிரிந்த நாடுகள் எல்லாம் தனித்த இராச்சியமாகவே காணப்பட்டன.
ஆனால் இலங்கையில் வடக்கும் கிழக்கும் அவ்வாறான இராச்சியங்கள் அல்ல. இலங்கை போன்ற நாட்டில் அவ்வாறான தனித்த இராச்சியமாக எந்த மாகாணத்தையும் கருத முடியாது.
அதேபோல் இலங்கையின் பூகோள வரலாற்றில் முன்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கும் கிழக்கும் தனித்து செயற்பட்ட வரலாறுகள் இல்லை. ஆகவே வடக்கையும் கிழக்கையும் தனி நாடாக மாற்றிக்கொடுக்க வேண்டிய எந்தவித தேவையும் இல்லை.
அதேபோல் அரசியல்வாதிகளின் தேவைக்கும், சர்வதேச தேவைக்கும் ஏற்ப செயற்பட முடியாது. வடக்கு கிழக்கு மக்கள் தாம் தனித்து போக விரும்புவதானால் மக்களின் விருப்பத்துக்கு அமைய ஒரு வாக்கெடுப்பை நடத்த வேண்டும். மாறாக சர்வதேசம் தாம் விரும்பும் காரணத்தினால் நாட்டை பிரிக்க இடம்கொடுக்க முடியாது.
இவ்வாறான நிலையில் இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் தவறியேனும் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் பிரதமராக தெரிவானால் இந்த நாட்டின் பூகோள வரைபடம் மாற்றப்படும்.
வடக்கு, கிழக்கு இல்லாத இலங்கை வரைபடத்தினையே இனிமேல் நாம் பார்க்கவேண்டி வரும். சிங்கள, பெளத்த நாடான எமது இலங்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றியமைக்க இந்த நாட்டு சிங்கள மக்கள் இடம் வழங்கக் கூடாது. நாட்டை பிரிக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது.
கேள்வி :- ஒன்றிணைந்த நாடு என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளதே. அப்படி இருக்கையில் நீங்கள் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும்?
பதில் :- கடந்த 2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒன்றிணைந்த நாடு என்ற வாக்குறுதியை கொடுத்தே ஆட்சியமைத்தனர். ஆனால் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் ஒஸ்லோ மாநாட்டில் சமஷ்டி உடன்படிக்கையை செய்துகொள்ளவில்லையா?
ரணில் விக்கிரமசிங்க என்பவர் மேற்குதேச நாடுகளிடம் மண்டியிட்டு ஆட்சி நடத்தும் ஒரு நபராவார்.
http://www.tamilwin.com/show-RUmtyITZSVmt7A.html
வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? பொலிஸ் அதிகாரியின் அதிர்ச்சித் தகவல்
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 08:52.57 AM GMT ]
நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
இக்கொலைகளுக்காக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஆயுதக் குழுக்களையும் கடந்த அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் அரசியல்வாதியாகவும், பாதுகாப்பு செயலாளராகவும் செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட்டார்.
அவர்களின் குற்றங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை நியாயப்படுத்துமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளரான தனக்கு வழியுறுத்தியதாகவும் அதனை நிராகரித்தமையினால் தன்னை மட்டக்களப்பிற்கு மாற்றம் செய்துள்ளதாகவும்,
கிழக்கு ஆயுதக் கும்பல்களை பயன்படுத்தி தன்னை கொலை செய்ய திட்டமிட்டதனால் தான் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தினுள் மனிதர்கள் வாழ்வதா? இல்லையா? எவ்வளவு காலம் வாழ்வது? என்பதனை குறித்து தீர்மானித்ததும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவாகும்.
வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படவர்களின் விதியும் இதுவாகும். குறித்த குழு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கியது. அதற்கு தொடர்புடையவர்களும் இராணுவத்தில் இருந்த நபர்களாகும்.
அந்தக் காலத்தில் கொல்லன்னாவை நகர முதல்வரை கடத்திச் சென்றதும் இந்நபர்களே. மக்கள் அக்குழுவை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த போதிலும் சிரேஷ்ட பிரதி காவல்த்துறை அநுர சேனாநாயக்க குற்றவாளிகளை விடுதலை செய்தார்.
இக்குற்றங்களுக்கு தொடர்புடைய நபர்கள் இதுவரையிலும் சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிர்வரும் அரசாங்கத்தின் கீழாவது தண்டனை வழங்க வேண்டும் என சிரேஷ்ட காவல்துறை அதிகாரியும் முன்னாள் காவல்துறை ஊடக பேச்சாளருமான பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITZSVmt7F.html
Geen opmerkingen:
Een reactie posten