தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 augustus 2015

பிரான்ஸ் கலைஸ் பகுதியில் 5,000 பேர்: லண்டனுக்குள் வர உயிரைப் பணயம் வைக்கிறார்கள் !

]

லிபியாவில் இருந்தும் வேற்று நாடுகளில் இருந்தும் , கடல் வழியாக பிரான்ஸ் வந்து கலைஸ என்னும் துறை முகத்தில் உள்ள காடுகளில் சுமார் 5,000 பேர் தங்கியுள்ளார்கள். இவர்களின் ஒரே நோக்கம் , லண்டனுக்குள் எப்படி என்றாலும் வந்து விடுவது தான். இவர்களுக்கு என்று ஒரு வீடு கிடையாது. ஆனால் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை தாங்கவும் முடியாது. சிறிய கூடாரங்களை அமைத்து. கள்ள மின்சாரத்தை எடுத்து தமது , மோபைல் போன்களை சார்ஜ் செய்கிறார்கள். அது போக அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் என்பதனால் , அவர்கள் அங்கே தமக்கு என்று ஒரு பள்ளிவாசலையும் அமைத்து விட்டார்கள்.
அது மட்டுமா , கொஞ்சக் காசை வைத்திருக்கும் நபர் ஒருவர் அங்கே சிறிய பெட்டிக் கடை ஒன்றைக் கூட திறந்து விட்டார். அங்கே வியாபாரமும் ஓகோ ஆஹா என்று நடக்கிறது. இவர்கள் வேலை என்ன தெரியுமா ? சதா 24 மணி நேரமும் லண்டனுக்குள் நுளைய முயற்ச்சிப்பது தான். லண்டனை நோக்கி வரும் பார ஊர்தி , லாரிகள் , வேன்கள் எது என்று இவர்கள் பார்பதே இல்லை. அங்கே சிறிது நேரம் குறித்த வாகனம் தங்கினால் போதும். யாருக்கும் தெரியாமல் அதில் ஏறி ஒளிந்து கொள்கிறார்கள். அதனூடாக லண்டன் வந்துவிடலாம என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்களின் முயற்ச்சி இதுவரை பலனளிக்கவே இல்லை.






Geen opmerkingen:

Een reactie posten