[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 04:23.03 PM GMT ]
29ம் நாள் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில்,
நாம் எமது மண்ணில் உரிமையுடன் கூடிய வாழ்வையே விரும்புகின்றோம்.
அபிவிருத்தி என்பது எமது உரிமைகளுக்கு பிறகே. போலியான அபிவிருத்திகள் எமக்கு தேவையற்றது.
விடுதலைப் பயிர் வளர்த்து வருபவர்கள் நாங்கள். அதற்காக வட்டுவாகல் வரை நாம் கண்ணீரும் உயிரும் இரத்தமும் சிந்தியிருக்கின்றோம்.
எம்மால் இன்னும் சாதிக்கமுடியும் எங்கள் உரிமையுடன் கூடிய வாழ்வுக்காக என தெரிவித்தார்.
எதையும் தரமுடியாது என்றார் முன்னாள் ஜனாதிபதி: சுமந்திரன்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 05:25.10 PM GMT ]
போர் முடிந்த கையோடு ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது அவர் எதனையும் கொடுக்க முடியாது என்றார். உடனே நாங்கள் இந்தியாவிற்கு இதனை தெரியப்படுத்தினோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.முகாமையாளர் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் 2015 பொதுத்தேர்தல் கேள்வி நேரம் என்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இங்கே,
கேள்வி:- தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொண்டு உங்கள் கட்சியானால் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
01 இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக.
01 இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக.
02 இலங்கையின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இரண்டும் ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசியல் தீர்வு என்று கூறியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கும் வகையில் எவ்வாறான அரசியல் தீர்வொன்றை நோக்கி நீங்கள் முன்னெடுக்கவுள்ளீர்கள்.
03 எமது அயல் நாடான இந்தியா 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலமாகவே தீர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையிலும் மற்றும் சர்வதேச சமூகம் 13ம் திருத்தச்சட்டத்தை மேலும் வலுவடையச் செய்வதன் மூலமான ஒரு அரசியல் தீர்வை பரிந்துரைத்திருக்கும் நிலையிலும் அதற்கு மேலான கோசங்கள் நடைமுறை சாத்தியமானவையா?
இந்த கேள்விகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் பதில் அளிக்கையில்,
இந்த கேள்விகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் பதில் அளிக்கையில்,
பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஒன்றல்ல. எங்களுடைய நிலைப்பாடும், அவர்களுடைய நிலைப்பாடும் ஒன்றாக இருந்தால் இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்பதே இருந்திருக்காது. ஆனால் பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் ஒன்று ஒற்றையாட்சி எனவும் மற்றையது அதிகூடிய அதிகாரப் பகிர்வு எனவும் குறிப்பிடுகின்றது.
ஆனால் எங்களுடைய நிலைப்பாடு சமஸ்டி என்பதே. எனவே இரு நிலைப்பாடுகளுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளது. மேலும் 13ம் திருத்தத்தின் கீழ் அதிகூடிய அதிகாரப் பகிர்வு என்பதையும் தாண்டி நாங்கள் முன்வைக்கும் தீர்வுக்கான ஆணையை, தமிழ் மக்கள் எமக்கு வழங்கவேண்டும்.
1994ம் அண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சமஸ்டி அல்லது ஒற்றையாட்சி என்ற தலைப்புக்கள் பயன்படுத்தப்படாமல் வந்த தீர்வு பொதிகள் உள்ளடக்கத்தில் சமஸ்டியை கொண்டிருந்தன.
எனவே தலைப்புக்களில் கவனம் செலுத்தமல் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தவேண்டும். மேலும் 13ம் திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கவேண்டும் என்றே இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் கூறிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சர்வதேச நாடுகளும் 13ம் திருத்தத்திற்குள் தான் எல்லாம் என கூறியிருக்கவில்லை.
கேள்வி:- போர்க்கால நடவடிக்கைகளினால் ஏற்பட்ட கீழே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக உங்கள் கட்சியினால் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
01 சர்வதேச, உள்ளக போர்க்குற்ற விசாரணைகள், வடகிழக்கில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற்றம் அல்லது குறைப்பு, படையினர் வசம் உள்ள தனியார் காணிகள், யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள், சிறைகளில் வாடும் போராளிகள் தொடர்பாக?
பதில்கள்,
இவற்றுக்கு பதிலளித்த அவர்,
போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமான குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு தரப்புக்களில் ஒரு தரப்பு குற்றங்களுக்கான விசாரணையினை நடத்துவதன் ஊடாக, அது நீதியான விசாரணையாக நடைபெறப்போவதில்லை. எனவே அது சர்வதேசத்தினால் விசாரிக்கப்படவேண்டும்.
அதனை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது தொடர்பில் 47 நாடுகளுக்கு எங்கள் கட்சியின் தலைவர் எழுத்து மூலம் கடிதத்தை எழுதியிருக்கின்றார். மேலும் இலங்கை இராணுவத்தில் உள்ள 19 பிரிவுகளில், 17 படைப்பிரிவுகள் வடகிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கிறார்கள்.
மிகுதி பிரிவுகளே மற்றய மாகாணங்களில் நிலைகொண்டிருக்கிறார்கள். இதனை நாம் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. படையினர் வெளியேற்றம் மக்களுடைய காணிகள் விடுவிப்புடன் தொடர்புபட்ட ஒரு விடயமாகும்.
இந்நிலையில் 2003ம் ஆண்டு நாம் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். அப்போது 88 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். ஆனால் தற்போது அது 27 ஆயிரமாக மாறியிருக்கின்றது. மிகுதி நிலங்களையும் விடுவிக்க நாம் ஜனநாயக வழி போராட்டங்களுக்கு இவ்வருடம் ஜனவரி மாதம் 15ம் திகதி திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் 8ம் திகதி, ஆட்சிமாற்றம் உருவாகி பின்னர் சில காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும். மேலும் காணாமல்போனவர்கள் தொடர்பாக முழுமையான விசாரணை தேவை. அவர்கள் காணாமல்போனதன் பின்னணி ஆராயப்படவேண்டும். மேலும் சிறைகளில் உள்ளவர்கள் தொடர்பாக வழங்கு விசாரணைகள் செய்வோம்.
கேள்வி: போர் முடிவுற்ற பின் காணப்படும் போரின் விளைவால் ஏற்பட்ட கீழே குறிப்பிப்பட்ட புதிய பிரச்சினைகள் தொடர்பாக உங்கள் கட்சியினால் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
போரினால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகளாக்கப் பட்டவர்களின் நல்வாழ்விற்கான, போரின் விளைவாக விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோருக்கான மீள் வாழ்வாதார, போரினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நல மேம்பாட்டிற்கான திட்டங்கள் எவை?
பதில்கள்,
போர் நிறைவடைந்ததன் பின்னர் நாங்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து தெரியப்படுத்தியிருந்தோம். இதனை நாங்கள் பாதிக்கப்பட்ட 25 கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டதன் பின்னர் தெரியப்படுத்தினோம்.
ஆனால் எமக்கு முன்னாலேயே அவ்வாறு எதனையும் செய்து கொடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி கூறினார். பின்னர் நாங்கள் இந்தியா சென்றிருந்தபோது இந்த விடயத்தை தெரியப்படுத்தியதன் அடிப்படையில் இந்தியா 50 ஆயிரம் வீடுகளை எமது மக்களுக்காக வழங்கியது.
மேலும் எமது கட்சியின், தலைவர் போருக்கு பின்னர் ஜனாதிபதியை சந்தித்து போருக்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பிலும், தமிழ் மக்களுக்கான உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஒரு குழுவும் உருவாக்கப்படவேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் அரசியல் தீர்வு தொடர்பில் மட்டும் ஒரு குழு உருவாக்கப்பட்டது.
பின்னர் அதுவும் பல சுற்றுப் பேச்சுக்களுக்கு பின்னர் முடங்கிப்போனது. இந்நிலையில் வடகிழக்கு மாகாணசபைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேவையான புள்ளி விபரங்களை நாங்கள் திரட்டியிருக்கிறோம், திரட்டிக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில் தேவையான உதவிகளை செய்வோம். முன்னரும் செய்திருக்கிறோம்.
என அவர் அங்கு கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmr2J.html
Geen opmerkingen:
Een reactie posten