தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 augustus 2015

மகிந்த மீது அவதூறு பரப்பும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

கூட்டமைப்பு கோரிய சமஷ்டிக்கு ஐ.தே.கட்சி இணங்கவில்லை: பிரதி வெளிவிவகார அமைச்சர்
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 11:12.02 AM GMT ]
வடக்கு மாகாணத்திற்கு சமஷ்டி நிர்வாகத்தை வழங்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த இணக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையான ஒற்றையாட்சி நாடு என்ற கட்டமைப்புகள் சமஷ்டி நிர்வாகத்திற்கு இடமில்லை.
சமஷ்டி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை. சமஷ்டி வடிவத்தையோ, அரசையோ கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது.
ஆனால், அதிகளவில் அதிகாரத்தை பரவலாக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது. எனினும் அது ஒற்றாட்சி என்ற கட்டமைப்புக்குள்ளேயே மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


மகிந்த மீது அவதூறு பரப்பும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 11:57.46 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற, முன்னாள் ஜனாதிபதியின் பெயருக்கு அவதூறு ஏற்படும் வகையில் அச்சடிக்கபட்டுள்ள சில தொகையான புத்தகங்களை இன்று காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பொரலஸ்கமுவவில் உள்ள திவுலபிடிய வீதியில் அமைந்துள்ள அச்சகத்திலே இப்புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆர்.எம். ஆர். அச்சகமே இந்த புத்தகங்களை அச்சிடும் பணியை தமக்கு வழங்கியதாக திவுலபிடிய வீதியில் உள்ள அச்சகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
கடவத்தை வீதி பெப்லியானவில் அமையப் பெற்றுள்ள ஆர் எம் ஆர் அச்சகம் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும், அங்கு இருந்த அச்சு இயந்திரங்கள் மற்றும் பிறப்பொருட்கள் யாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் உறுப்பினர் ரொஜர் செனவிரட்ன,
ஐக்கிய தேசிய கட்சி தனது தோல்வி பயத்தின் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், நாட்டை காப்பற்றிய ஒருதலைவனுக்கு சேறுபூசுகின்ற நடவடிக்கைகளையே இவர்கள் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten