தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 augustus 2015

மகிந்தவை ஏன் கைவிட்டேன்? விளக்கம் கூறுகிறார் அமைச்சர் றிசார்ட் பதியூதீன்!

வன்னி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தான் செல்லும் முன்னர் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் அங்கு சென்று விடுவதாக அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் தனது அதிகாரிகள் மூலம் தன்னை பின் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா தேக்கவத்தையில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச இரண்டாம் முறை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வடக்கு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத காரணத்தினாலேயே அவரை கைவிட்டு வெளியேற நேர்ந்தது.
அத்துடன் பொதுபல சேனா மற்றும் மகிந்த ராஜபக்சவை சுற்றி இணைந்து கொண்ட இனவாத சக்திகளும் அவரது தோல்விக்கு காரணம்.
பொதுபல சேனா இனவாத கருத்துக்களை வெளியிட்டு செயற்பாடுகளை முன்னெடுத்த போது மகிந்த ராஜபக்ச அதற்கு எதிராக எவ்விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதனால், வடக்கு கிழக்கில், வாழும் முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று நாங்கள் உணர்ந்தோம்.
இறுதியில் பொதுபல சேனா, ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு உதவ போவதாக கூறியதும் எம்மால், தொடர்ந்தும் மகிந்த அரசில் இருக்க முடியாது என உணர்ந்தோம்.
இதனால், மகிந்தவை கைவிட்டு, ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வடக்கு மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டு மக்களுக்கும் அதிகளவிலான நன்மைகள் கிடைத்துள்ளன எனவும் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten