தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 augustus 2015

தேர்தலில் வென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு!– மகிந்த ராஜபக்ச-எப்போ!?

சொந்தச் சரக்கில்லாத வங்கரோத்துக்காரர்கள் எம்மை குறை சொல்லிக் காலத்தை ஓட்டுகின்றனர், கஜேந்திரக்குமார் அணி குறித்து சுமந்திரன்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 07:05.07 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கான சமஸ்டித் தீர்வை தெளிவாக முன்வைத்து, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தைரியமாக வெளியிட்டுள்ளது.
ஆனால் இவற்றிற்கு மாற்றீடு எதையும் முன்வைக்க தைரியமும், தகுதியும் இல்லாதவர்கள், வெற்றுச் சங்குகள் போன்று கூச்சல் இடுகின்றனர் என்று M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
கரவெட்டி கிழக்கில் நேற்று  மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சட்டத்தரணி சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக சமஷ்டி முறையை முனவைத்துள்ளது.
அத்துடன் இந்தத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டு உள்ளது. ஆனால் இவை எதனையும் செய்ய தைரியமும், திறமையும் இல்லாதவர்கள், எம்மைக் குறை கூறி காலத்தைக் கழிக்கின்றனர். தம்மிடம் எதுவும் சொந்தமாக இல்லாத வெறுமையின் காழ்ப்புணர்ச்சியை, போலியான குற்றச்சாட்டுகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
போர் முடிந்தது முதல் நாம் மக்களுடன் இருக்கின்றோம், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், வழக்குகள் மூலம் மக்களுக்கு வெற்றியும் பெற்றுக் கொடுத்தோம், ஆனால் இவை எதையுமே செய்யாமல் இருந்தவர்கள், தேர்தல் வந்ததும், திடீரென தூக்கத்தில் இருந்து விழித்தெளுந்தவர்கள் போன்று திடீர் என்று இங்கே வந்து முகாமிட்டு எம்மைத் திட்டித் தீர்த்து காலத்தை ஓட்டுகின்றனர்.
நேற்று வரை தமிழர்களை திரும்பிக் கூடப் பார்க்கத இவர்கள், தேர்தல் முடிந்த மறுகையோடு தமிழர்களை மறந்து விடுவார்கள்.
தமிழ் மக்களுக்காக எதையுமே செய்யாமல், வெறுமனே விமர்சித்துக் கொண்டும், குறை கூறிக்கொண்டும் இருப்பது முறையல்ல, தம்மிடமுள்ள மாற்றீடு என்ன என்பதனை சொல்ல வேண்டும், ஆனால் அவர்களால் சொல்ல முடியாது.
ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வை விட சிறந்த சாத்தியமான தீர்வை இவர்களால் மட்டுமல்ல, யாராலும் முன்வைக்க முடியாது.
தமிழ் மக்கள் நாம் முன்வைத்துள்ள தீர்வை எந்த அளவு ஏற்றுக் கொள்கின்றார்கள் என்று சர்வதேசம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்திற்கு நீங்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
தமிழர்களில் யாராவது ஒரு சிலர் தமது வாக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்காமல், தவறியேனும் கொள்கை இல்லாதவர்களுக்கு வழங்கினால், அவை தீர்விற்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவதுடன் , தமிழர்களே தீர்வை விரும்பவில்லை என்று வழங்கிய அங்கீகாரமாகவும் கருதப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.
ஆகவே தமிழர்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும். வரலாற்றின் ஒவ்வொரு தீர்க்கமான சந்தர்ப்பங்களையும் தவறவிடாமல் முறையாக பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmrzF.html


நரம்பில்லாத வீணையில் நாதம் வருமோ?- சு.பசுபதிப்பிள்ளை கேள்வி
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 07:40.31 AM GMT ]
வெற்றிலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காத டக்ளஸ் தேவானந்தா நரம்பில்லாத வீணையை வாசிக்கத் தொடங்கியுள்ளார்.
10 வருடகாலமாக வெற்றிலையில் போட்டியிட்ட டக்ளஸ் மற்றும் சந்திரகுமார் ஆகியோர் இம்முறையும் கிடைக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம் தான் கிடைத்தது.
இந்த நிலையிலே வீணையைத் தூசி தட்டியுள்ளார். எனினும் நரம்பில்லாத வீணையால் பாடி வெல்ல முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு!– மகிந்த ராஜபக்ச
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 07:57.24 AM GMT ]
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்று தரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
தேர்தல் பிரசாரத்திற்காக தனக்கு சீனாவிடம் இருந்து நிதி கிடைப்பதாக கூறப்படுவதை மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு அமைப்புகள் கூடாக மேற்குலக நாடுகளிடம் இருந்து நிதியை பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவிடம் இருந்து தனக்கு நிதி கிடைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, அதனை நிராகரித்துள்ளதுடன் முடிந்தால், சீனாவிடம் இருந்து தனக்கு நிதியை பெற்று தருமாறு குறிப்பிட்டுள்ளார்.

எவருடனும் தான் இரகசியமான தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்காக தான் தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் மேற்குலக நாடுகள் தனக்கு ஜனநாயகத்தை கற்பிக்க அவசியமில்லை எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

வடக்கில் வாக்குகளை பெற முடியாததே தான் ஜனவரி 8ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்விய முக்கிய காரணம் எனவும் தேர்தலில் தோல்விடைவோம் என்று தெரிந்தும் வடக்கு மாகாண சபையை ஏற்படுத்தி அங்குள்ள தமிழ் மக்களுக்கு வாக்குரிமையை வழங்கியதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்று தரப் போவதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmr0C.html

Geen opmerkingen:

Een reactie posten