[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 04:01.21 PM GMT ]
குறித்த தீவுக்கு பெருமளவு ஷெல்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஷெல்களில் உள்ள வெடிபொருட்கள் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வெடிமருந்துகள் டைனமற் தயாரிப்புக்காக மீனவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை குறித்த வெடிப்பொருட்களை மீட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வெடிபொருட்கள் எங்கிருந்து வந்தன என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். சுன்னாகத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் துணிகரக் கொள்ளை: நகைகள், பணம் சூறை!
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 04:33.41 PM GMT ]
கந்தரோடை சுப்பிரமணியம் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கட்டிய நால்வர் கூரை வழியாக உள் நுழைந்து அங்கிருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சங்கிலிகள், இரண்டு சோடி தோடுகள் காப்புகள் மற்றும் ஆயிரம் பவுன்ஸ் வெளிநாட்டு கரன்ஸி என்பனவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இந்த வீட்டுக்கு சற்றுத் தள்ளி உள்ள மற்றொரு வீட்டினுள் நுழைந்த அதே கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைக் மிரட்டி சுமார் முப்பத்தையாயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட அதேசமயம் அங்குள்ள அலுமாரிகளில் தேடுதல் நடத்திய போதிலும் தங்க நகைகளை எவையும் கிடைக்காத நிலையில் கைவிட்டுச் சென்றுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் இத்தகைய துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரத கொலை வழக்கு விசாரணைக்கு மூவர் அடங்கிய நீதவான் குழு
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 04:57.47 PM GMT ]
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இந்த நீதவான் குழுவினை நியமித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசேட சம்பவமாக கருதி மூவர் அடங்கிய நீதவான் குழுவொன்றின் ஊடாக விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் யுவான்ஜித் விஜேதிலக்க நீதமன்றில் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதமன்றம், மூவர் அடங்கிய நீதவான் குழு ஒன்றை நியமித்துள்ளது.
இந்த நீதவான் குழாமின் தலைவராக உயர் நீதிமன்ற நீதவான் சிரான் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்மினி ரணவக்க குணதிலக்க மற்றும் எம்.சீ.பி.எஸ். மொராயஸ் ஆகியோர் ஏனைய நீதவான்களாவர்.
மஹிந்தவுக்கு எதிராக குருநாகலில் சந்திரிக்காவும் சோபித தேரரும்!
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 05:00.20 PM GMT ]
எதிர்வரும் 8ம் திகதியன்று இவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அடிப்படையில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளனர்.
அத்துடன் பல கூட்டங்களையும் அவர்கள் குருநாகலில் நடத்தவுள்ளனர்.
எனினும் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்தநிலையில் சந்திரிக்கா மற்றும் சோபித தேரரின் நடவடிக்கைகளுக்கு மஹிந்த ராஜபக்ச தரப்பு தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyITYSVmt3D.html
Geen opmerkingen:
Een reactie posten