தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 augustus 2015

இலங்கைக்கு எதிரான யோசனையை பான் கீ மூன் நிராகரித்தார்

இலங்கைக்கு எதிரான யோசனையை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நிராகரித்துள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் சில நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க் குற்றவியல் விசாரணை நடாத்த மனித உரிமை கண்காணிப்பகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான பில்பே பொலோசியன் மேற்கொண்ட முயற்சியை பான் கீ மூன் முறியடித்துள்ளார்.
சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு பக்கச்சார்பாக செயற்படுவதாக பொலோசியன் தெரிவித்துள்ளார்.
எனினும், பாதுகாப்புப் பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த விரும்புவதாக பொலோசியன், பான் கீ மூனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்ட முயற்சி குறித்து முதல் தடவையாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்துமாறு உத்தரவிடும் அதிகாரம் தமக்கு கிடையாது என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர்களை கொலை செய்ததாக யோசனை முன்வைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக சிங்கள பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் குறித்து அரசாங்கத்திற்கும் தெரிந்திருக்கவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten