[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 05:17.20 AM GMT ]
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரதிப் எக்னெலிகொட தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இந்த மூவரும் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், குறித்த மூவர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழி ஊடாக தப்பி சென்றுள்ளவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பாதாள குழுக்களை சேர்ந்த இவர்கள் கம்பஹா மாவட்ட அரசியல்வாதிகளுடன் கடந்த காலத்தில் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் வந்திருக்கலாம் எனவும் புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நாட்டிற்கு வந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குறித்த பாதாள குழு உறுப்பினர்கள் மூவர்களில் இருவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் மற்றவர் 20 வருடத்திற்கு முன்னர் நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர் பிரதிப் எக்னெலிகொட தொடர்பில் புதிய தகவல் அம்பலம்
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 05:45.32 AM GMT ]
ஆயுதங்களுடன் தமிழர்கள் இருவரினால் கொழும்பில் வைத்து கடத்தி செல்லப்பட்ட எக்னெலிகொடவை மின்னேரியா இராணுவ முகாமில் ஒப்படைத்துள்ளதாகவும், இது தொடர்பில் கிடைத்துள்ள தகவலுக்கமைய எதிர்வரும நாட்களில் இராணுவ கர்னல்கள் இருவர் கைது செய்யப்படவுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுகை வண்டி ஒன்று, அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் தேர்தல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ராஜபக்ச ஆட்சியின் போது காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளின் ஆவணங்கள் மீண்டும் திறக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூடப்பட்டுள்ள விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்து துல்லியமான பாரபட்சமற்ற, நியாயமான மற்றும் நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறினார்.
இதேவேளை, எக்னெலிகொடவை தான் பிரான்சில் கண்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ சமீபத்தில் நீதிமன்றில் சாட்சியளித்திருந்தார்.
அதற்கமைய அவரினால் மேற்கொள்ளப்பட்ட போலியான சாட்சி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதோடு அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறியதாக ராஜித சேனாரட்ன மீது குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 06:17.57 AM GMT ]
நேற்று முன்தினம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக, மத்திய தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
களுத்துறையில் சுகாதார அதிகாரிகளுக்காக நடத்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
DW-0741 என்ற இலக்கத்தைக் கொண்டதும் PD-4435 என்ற இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு கெப் ரக வாகனமும் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்டமையை தமது பணியாளர் அவதானித்தாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த நோயாளர் காவுகை வண்டியில் வைத்தியசாலையின் தேவைக்காக களுத்துறை ஆதார வைத்திசாலைக்கு மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக, சிறிமாவோ பண்டாநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten