தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 augustus 2015

கேட்டுக் கேள்வி இல்லாமல் லண்டனில் தமிழர்களை தூக்கி எறியும் சட்டம் அமுலில் ?

ஐ.டி.பி என்னும் சட்டத்தை லண்டனில் அமுல்படுத்த , அன் நாட்டு அரசு முனைந்து வருகிறது. அதாவது ஒருவர் அகதிகள் அந்தஸ்த்தை விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டால். அவரை உடனே நாடு கடத்த அன் நாட்டு குடி வரவு ஆதிகாரிகளுக்கு மேலதிக பவரை இந்த சட்டம் கொடுக்கிறது. அகதி அந்தஸ்த்தை விண்ணப்பித்தவர் எந்த நீதிமன்றத்தையும் நாட முடியாது. அதாவது குடிவரவு அதிகாரிகள் எடுக்கும் முடிவே இறுதியானது. இதுபோன்ற கடுமையான சட்டம் ஒன்றை வரைந்துள்ள பிரித்தானியா இதனை பாராளுமன்றில் தற்போது சமர்பிக்க உள்ளது. அது நிறைவேறினால் , பிரித்தானிய மகாராணியார் கைகளுக்கு அது செல்லும். அவர் அதில் ஒரு கையெழுத்தை போட்டால் போதும்,
உடனே சட்டம் அமுலுக்கு வந்து விடும். இதன் காரணமாக விசா இல்லாமல் இருக்கும் பல நூறு ஈழத் தமிழர்களை உடனடியாக பிரித்தானியா திருப்பி அனுப்ப நேரிடும். இந்தச் சட்டம் தொடர்பாக பல தமிழ் சட்டத்தரணிகள் மற்றும் சொலிசிட்டர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் இது தொடர்பாக தமிழர்களுக்கு போதுமான அறிவித்தலை செய்வது இல்லை. ஏன் என்றால் தமது பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்று தான் நினைப்பார்கள். எனவே தமிழர்கள் ஜாக்கிரதையாகவும் முன் ஏற்பாடாகவும் இருப்பது நல்லது.

Geen opmerkingen:

Een reactie posten