தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 augustus 2015

பொதுத் தேர்தல்: வடக்கு கிழக்கில் 18 இலட்சத்து 70 ஆயிரத்து 73 பேர் வாக்களிக்கத் தகுதி

சந்திரிக்கா குமாரதுங்கவை கட்சியில் இருந்து துரத்த முயற்சிக்கும் சுசில்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 06:38.42 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை தொடர்பில் தேர்தலின் பின்னர் கூடும் முதலாவது மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைமை உருவாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரினால் கட்சிக்கு எவ்வித நன்மையும் கிடையாது.
எனவே அவரை தொடர்ந்து கட்சியில் வைத்திருப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தேர்தலின் பின்னர் கூடும் முதலாவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் சுசில் பிரேமஜயந்த அரசியலுக்குள் நுழைந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு பல்வேறு வகையில் ஆதரவு வழங்கியதும் சந்திரிக்கா குமாரதுங்க என்பது குறிப்பிடத்தகக்கது.
சில காலங்கள் சுசில் பிரேமஜயந்த உட்பட குழுவினருக்காக சட்டபூர்வ ஆலோசனைகளும் சந்திரிக்கா குமாரதுங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல்: வடக்கு கிழக்கில் 18 இலட்சத்து 70 ஆயிரத்து 73 பேர் வாக்களிக்கத் தகுதி
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 06:46.33 AM GMT ]
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 18 இலட்சத்து 70 ஆயிரத்து 73 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் 10 இலட்சத்து 87 ஆயிரத்து 776 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்து 65 ஆயிரத்து 167 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 852 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் 7 இலட்சத்து 82 ஆயிரத்து 297 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
இதற்கிணங்க யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேரும், வன்னி மாவட்டத்தின் மன்னாரில் 79 ஆயிரத்து 433 பேரும், வவுனியாவில் 1 இலட்சத்து 9 ஆயிரத்து 705 பேரும், முல்லைத்தீவில் 63 ஆயிரத்து 920 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.
இம்முறை நாட்டில் ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் தேர்தல் மூலம் 196 பேரை தெரிவு செய்வதற்காக 6151 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் 17 இல் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 21 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten