தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 augustus 2015

மகிந்தவின் வழியில் பிரதமர் ரணில்!

ஒரே நாடு ஒரு இனம் என்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. அதையே இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபாடுகள் கிடையாது என்று அவர் பேருவளையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.
அங்கு பேசிய அவர்,
சிங்கள, தமிழ், முஸ்லிம் என வேறுபாடுகள் இன்றி இலங்கையர் என்ற ஐக்கியத்தை இனங்களுக்கிடையில் ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே இதனை சாத்தியமாக்க முடியும் எனவும் ரணில் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, மைத்திரி  ரணில் அரசாங்கத்தில் இனவாதம் இல்லை.
அடுத்த 5 வருடங்களுக்கு நாங்கள் ஆட்சியை அமைப்போம். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்படும். அனைவரது சம உரிமைகளும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயணித்த அதே பாதையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பயணிக்க உள்ளதாகவும், நாட்டில் சிறுபான்மை இனம் என்று யாருமில்லை.
எல்லோரும் ஒரே நாட்டு மக்கள் என்று இனப்பிரச்சினையை அவர் மூடி மறைக்க முயன்றார் என்றும். அதை இந்நாள் பிரதமர் கையிலெடுத்துள்ளார் என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten