தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 augustus 2015

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவுதி எஜமான்

நாட்டை விட்டு தப்பி செல்லவுள்ள ராஜபக்சவின் மகன்?
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 10:18.33 AM GMT ]
பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ள ராஜபக்சவின் மகன் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்சவின் மகன் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் 4 பேருடன் இணைந்து டுபாயில் நடைபெறவுள்ள விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறி அவர் இவ்வாறு வெளிநாடொன்றிற்கு தப்பி செல்ல தி்ட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
றகர் வீரர் தாஜுடீனின் மரணம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் ராஜபக்சவின் மகன் கடந்த காலங்களில் வெளிநாட்டில் வசித்து வந்துள்ளதுடன் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மஹிந்த ராஜபக்ச நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கான விருப்பத்தினை தன்னிடம் கேட்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்சவினால் மகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தியினால் இதற்கான அனுமதி வழங்கப்படுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவுதி எஜமான்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 09:46.32 AM GMT ]
இலங்கை வீட்டுப் பணிப் பெண் ஒருவரை இணையத்தின் ஊடாக விளம்பரம் செய்து, விற்பனை செய்ய செய்வதற்கு சவுதி எஜமானர் முயற்சித்துள்ளார்.
குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவுதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளார்.
உள்நாட்டு ஏல விற்பனை இணையத்தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும், ஒப்பந்தம் முடிவுறுத்திக் கொண்டுள்ளதாகவும் எஜமானர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் சேவையாற்ற அனுமதியிருப்பதாகவும் விரும்பியவர்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அதிகளவான சம்பவங்கள் பதிவாவதாக சவுதி மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyITYSVmt0I.html

Geen opmerkingen:

Een reactie posten