தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 maart 2017

அமெரிக்காவின் அடுத்த அதிரடி..! H-1B விசா கட்டுப்பாடுகளை தொடர்ந்து சிக்கலில் H4 வகை விசாக்கள்

தகவல் தொழிற்துறையில் பணியாற்றுவதற்காக அமெரிக்கா செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது H4 விசாவினுடாக அமெரிக்காவிற்கும் பிரவேசிக்கும் H – 1B வகை சார் விசாவுடைய குடும்பத்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக H – 1B விசா வழங்கப்படுகிறது. இவ்விசாவின் மூலம் வரும் பணியாளர்களின் குடும்பத்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு H4 என்ற விசா வழங்கப்படுகிறது.
மேலும் H- 1B விசா ஊடாக அமெரிக்கா வந்து பணிபுரிபவர்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து, H4 விசாவின் ஊடாக அமெரிக்கா வருபவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் உயரியக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம், பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.
அத்தோடு H4 விசாவில் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை 60 நாட்களுக்கு நிறுத்த கோரி அமெரிக்கர்களுக்கான தொழில் அமைப்பு ஏற்படுத்திய கோரிக்கையை தொடர்ந்து, அமெரிக்க நீதித்துறை சார்பில், வொஷிங்டன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, அமெரிக்காவிற்கு குடும்பமாக சென்று பணிபுரியும் திட்டமுடையவர்களுக்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
US-Visa
- See more at: http://www.canadamirror.com/canada/82432.html#sthash.aG7H0YKZ.SEFP0BSL.dpuf

Geen opmerkingen:

Een reactie posten