தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 maart 2017

பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்- பிரான்சில் பயங்கரம்


பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு பிரான்ஸில் உள்ள Grasse நகரில் Alexis de Tocqueville என்ற பாடசாலை இயங்கி வருகிறது.
இந்த பாடசாலையில் சற்று முன்னர் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை இருவர் இணைந்து செய்துள்ளதாகவும், அவர்களில் 17 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திய இருவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ள மாணவனிடமிருந்து 2 துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், 2 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த துப்பாக்கிச் சூட்டில் தலைமை ஆசிரியர் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் முயற்சியிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு பிரான்ஸில் உள்ள Grasse நகரில் Alexis de Tocqueville என்ற பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் சற்று முன்னர் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், பள்ளி மாணவர்களை காப்பாற்றும் முயற்சியிலும் பொலிசார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும், இது ஒரு தீவிரவாத தாக்குதலாக கூட இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten