இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பெரும்பாலான இலங்கையர்கள், இந்தியாவிற்குபுலம்பெயர்ந்து அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த வகையில் 112 அகதி முகாம்களில் இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை, தாய் நாட்டிற்கு திருப்பிஅனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்அலுவலகம் முன்னெடுத்து வருகின்றது.
நாடு திரும்பும் அகதிகளுக்கு விமான பயணச்சீட்டு, போக்குவரத்து கொடுப்பனவு,உணவு நிவாரணம் ஆகியவற்றை ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமே வழங்கிவருகின்றது.
முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களை தமிழ்நாட்டு அரசாங்கம் பாதுகாத்துவருகின்றது.
இவ்வாறு இரண்டு மனப்போக்குகளைக் கொண்ட இலங்கை அகதிகள் சிலர் தங்கள்கருத்துக்களை தெரிவித்துள்ளனர்,
எனக்கு ஐந்து வயது இருக்கும் போது 1996ம் ஆண்டு திருச்சி முகாமிற்குவந்தேன், இந்திய அரசாங்கத்தால் பணமும் பல நன்மைகளும் கிடைக்கிறது.
ஆனால் சொந்தநாட்டிற்குச் சென்றால் சாதாரண வாழ்க்கையை வாழ்வோமா என்று நிச்சயித்து கூறமுடியாது என வவுனியாவில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒவ்வொரு குடும்பத்திற்கு இலவசமாக 20 கிலோகிராம் அரிசிவழங்கப்படுகின்றது, முகாம்களில் வாழும் இலங்கையர்கள் சந்தோசமாகவே வாழ்ந்துவருகின்றனர்.
தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை அவ்வாறு திரும்பிச் செல்லவேண்டுமாயின்,கேள்விகளுக்காக விளக்கங்கள் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே நாடுதிரும்புவோம் என சிலர் தெரிவித்துள்ளனர்.
அங்கு போனால்,எனக்கு திருப்தியாக இருக்காது,நான் திரும்பிப் போகமாட்டேன் என 25வயது யுவதி ஒருவர் உருக்கமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten